தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Priest Appointment: Govt Appeals Against Court Order-cpm

அர்ச்சகர் நியமனம்: நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்க-சிபிஎம்

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 12, 2023 05:01 PM IST

அர்ச்சகராக செயல்பட தேவையான பயிற்சி, அறிவு, அரசு சான்றிதழ் இருந்தால் போதும். இது இறை நம்பிக்கையாளர்களுக்கு எதிரானதல்ல.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

ட்ரெண்டிங் செய்திகள்

திருச்சி குமார வயலூர் முருகன் கோவிலில் இரண்டு அர்ச்சகர்களை (பிராமணர் அல்லாதோர்) தமிழக அரசு நியமனம் செய்ததை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறது. ஆகம விதிகளின்படி இவர்கள் பொருத்தமற்றவர்கள் என தீர்ப்பில் குறிப்பிடப்படுகிறது.

பிராமணர் மட்டும் தான் அர்ச்சகர் ஆகலாம் என்கிற காலம் மலையேறிவிட்டது. எதுவும் எந்த சாதிக்கும் ஏகபோகமல்ல. அர்ச்சகராக செயல்பட தேவையான பயிற்சி, அறிவு, அரசு சான்றிதழ் இருந்தால் போதும். இது இறை நம்பிக்கையாளர்களுக்கு எதிரானதல்ல.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று தான் அரசியல் சாசனம் கூறுகிறது. ஆகம விதிகள், அரசியல் சாசனத்தை விட உயர்ந்தது அல்ல. இது அனைத்து மத நம்பிக்கை சார்ந்த விதிகளுக்கும் பொருந்தும்.

மனுவாத கோட்பாடுகளுக்குள்ளேயே சமூகத்தை அடைத்து வைக்க நினைக்கும் சங்கிகளின் பிற்போக்கு கருத்தியல் பரவலானால், சமத்துவமும் சமூக சீர்திருத்தமும் பின்னுக்கு தள்ளப்படும் ஆபத்து உண்டு என்பதை தான் தீர்ப்பு பிரதிபலிக்கிறது. தமிழக அரசு மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் யின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்