விஜயகாந்த் நினைவு தினம்! அமைதி பேரணிக்கு அனுமதி மறுத்த போலீஸ்! தடையை மீறிய பிரேமலதா! சீறிய தேமுதிக!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  விஜயகாந்த் நினைவு தினம்! அமைதி பேரணிக்கு அனுமதி மறுத்த போலீஸ்! தடையை மீறிய பிரேமலதா! சீறிய தேமுதிக!

விஜயகாந்த் நினைவு தினம்! அமைதி பேரணிக்கு அனுமதி மறுத்த போலீஸ்! தடையை மீறிய பிரேமலதா! சீறிய தேமுதிக!

Kathiravan V HT Tamil
Dec 28, 2024 11:33 AM IST

பேரணியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கோயம்பேட்டில் குவிந்தனர். பேரணிக்கு அனுமதி தருவது தொடர்பாக சுதீஷ் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி கிடைக்காததால், தடையை மீறி அமைதி பேணியை தேமுதிகவினர் நடத்தினர்.

விஜயகாந்த் நினைவு தினம்! அமைதி பேரணிக்கு அனுமதி மறுத்த போலீஸ்! தடையை மீறிய பிரேமலதா! சீறிய தேமுதிக!
விஜயகாந்த் நினைவு தினம்! அமைதி பேரணிக்கு அனுமதி மறுத்த போலீஸ்! தடையை மீறிய பிரேமலதா! சீறிய தேமுதிக!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி அக்கட்சியின் சார்பில், மாநிலத் தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து கேப்டன் விஜயகாந்தின் நினைவிடம் வரை பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. 

தடையை மீறி குருபூஜை

முன்னதாக விஜயகாந்தின் நினைவுநாளை குருபூஜையாக அக்கட்சி அனுசரிக்கிறது. இதனையொட்டி இதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் தேமுதிக சார்பாக நேரில் அழைப்புவிடுக்கப்பட்டது. 

பேரணியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கோயம்பேட்டில் குவிந்தனர். பேரணிக்கு அனுமதி தருவது தொடர்பாக சுதீஷ் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி கிடைக்காததால், தடையை மீறி அமைதி பேணியை தேமுதிகவினர் நடத்தினர். 

காழ்புணர்ச்சி யாருக்கு?

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில், எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கருப்பு உடை அணிந்து பேரணியில் கலந்து கொண்டனர்.  முன்னதாக பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், இதற்கு காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சியா அல்லது போலீசாரின் காழ்ப்புணர்ச்சியா என்பது தெரியவில்லை என தேமுதிக துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்தார். ஆனால் காவல்துறை தரப்பில் போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி பேரணிக்கு அனுமதி தரவில்லை என தெரிகிறது என தெரிவித்தார். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.