Prashant Kishore: ’2026 தேர்தல் தவெக வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்!’ புஸ்ஸி ஆனந்திடம் PK தந்த ரிப்போர்ட்!
Prashant Kishore: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு ஒப்பந்தம் இல்லாமல், நட்பு அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு 15 முதல் 20 சதவீதம் வரை வாக்கு வங்கி உள்ளதாக முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிக்கை அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தலுக்கு தயார் ஆகும் தவெக
அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழகம் செய்து வருகிறது. தவெக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு மாவட்டம் தோறும் கட்சி பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க: 'டாக்டர் எங்கே? உடனே வரனும்!’ அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பவம் செய்த நடிகர் கஞ்சா கருப்பு!
விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர்!
முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் என்ற அரசியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பிரசாந்த் கிஷோர் நேற்றைய தினம் சென்னை வந்தார். பனையூரில் உள்ள தவெக அலுவககத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பை தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தேர்தல் வியூகம் தொடர்பான ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் அளித்ததாக கூறப்பட்டது.
மேலும் படிக்க: தவெக தலைவர் விஜயை பிரசாந்த் கிஷோர் சந்தித்தது ஏன்? ஆதவ் அர்ஜூனாவின் அடுத்த மூவ் என்ன?
புஸ்ஸி ஆனந்த்திடம் ஆலோசனை
இரண்டாம் நாளான இன்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோரிடம் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தி உள்ளார். ஆதவ் அர்ஜூனாவின் இல்லத்தில் நடைபெற இந்த சந்திப்பில் தவெக அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க: ’6 ரூபாய் மின்சாரத்தை 20 ரூபாய்க்கு தனியாரிடம் வாங்குவதா?’ அரசை விளாசும் அன்புமணி!
தவெக வாக்கு வங்கி எவ்வளவு?
இந்த சந்திப்பின் போது விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு 15 முதல் 20 சதவீதம் வரை வாக்குகள் உள்ளது குறித்த ஆய்வறிக்கையை பிரசாந்த் கிஷோர் வழங்கி உள்ளார். மேலும் அடுத்தாண்டு நடைபெற உள்ள 2026 தேர்தலில் எவ்வாறு பணியாற்றினால் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முடியும் என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கி உள்ளார். பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கையை தவெக தலைவர் விஜயை சந்தித்து தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் வழங்கி உள்ளனர்.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு ஒப்பந்தம் இல்லாமல், நட்பு அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
