Tips To Cut EB Bill: கரண்ட் பில்லை குறைக்க சூப்பர் ஐடியாக்களை பின்பற்றுங்களேன்!
- தமிழகத்தில் புதிய அரசு வந்ததும் மாதாந்திர மின்கட்டணம் செலுத்தும் முறையை எதிர்பார்த்த மக்களுக்கு அல்வாதான் கிடைத்தது. இருந்தாலும் புத்திசாலித்தனமாக சில வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்களுடைய கரண்ட் பில்லைக் கணிசமாகக் குறைக்கலாம்.
- தமிழகத்தில் புதிய அரசு வந்ததும் மாதாந்திர மின்கட்டணம் செலுத்தும் முறையை எதிர்பார்த்த மக்களுக்கு அல்வாதான் கிடைத்தது. இருந்தாலும் புத்திசாலித்தனமாக சில வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்களுடைய கரண்ட் பில்லைக் கணிசமாகக் குறைக்கலாம்.
(1 / 9)
உங்களது மாதாந்திர மின் கட்டணம் கடந்த 6 மாதங்களில் எவ்வளவு ஆனது என்பதைக் கணக்கிடுங்கள். முறையாகத் திட்டமிட்டால் செலவைக் குறைத்துவிட ஏராளமான வழிமுறைகள் உள்ளன.
(2 / 9)
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் அன்றாட வாழ்க்கை மிகவும் துயரம் மிகுந்ததாக பெரும்பாலான மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. ஒருபுறம் பஸ் கட்டணம், காஸ் கட்டணம், போக்குவரத்துச் செலவு, பால் உள்ளிட்ட வீட்டுச்சாமான்கள் விலையேற்றம் என சாமானியரின் வாழ்க்கையில் ஏற்படும் இம்சைகளை சொல்லி மாளாது. அத்தோடு பொருளாதார சரிவால் நிறையபேருக்கு வேலை பறிபோனதால் கூடுதல் சிரமம் வேறு. வரவை அதிகரிக்கமுடியாவிட்டாலும் செலவைக் குறைக்கலாமே. எனவே அதை வீட்டின் மின்சாரச் செலவைக் குறைப்பதில் இருந்து தொடங்குவோம்.
(3 / 9)
அந்தக் காலத்து குண்டுபல்புகள் எல்லாம் கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்டன. இருப்பினும் ஊரகப் பகுதிகளிலும், நகர்ப்பகுதிகளில் வீட்டுக்கு வெளிப்புறத்திலும், கழிவறைகளிலும் பயன்படுத்தத் தான் செய்கின்றனர். 15 வாட் குண்டுபல்பு மாட்டினால் அதில் வெளிச்சம் தெரியாமல் தடுமாறி விழுந்து விடக்கூடும். அதற்கடுத்து 40 வாட்ஸ் பல்புதான். இன்றைய நிலையில் அதன் விலை குறைவாக இருந்தாலும் செலவாகும் மின்சாரம் எக்கச்சக்கம். குண்டு பல்புகளுக்குப் பதில் எல்இடி பல்புகளை வாங்கினால் அதிக மின்சாரம் மிச்சப்படும். செலவும் குறைவு. எல்இடி பல்ப் விலை அதிகம் என்று சொல்பவர்களுக்கு அதன் பயன்பாட்டுக் காலம், சிக்கனப்படுத்தும் மின்சாரச் செலவைக் கணக்கிட்டால் அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை எனலாம். ஸோ எல்இடி பல்பு வாங்குங்கள்.
(4 / 9)
டியூப்லைட்கள் பொதுவாக 40 வாட்ஸ் அல்லது 60 வாட்ஸ் இருக்கலாம். இதுவும் விலை கம்மிதான். ஆனால் இப்போதுதான் எல்இடி டியூப் லைட்டுகள் வந்துவிட்டதே. எல்இடி பல்புகளுக்கு மேலே சொன்ன விளக்கம்தான் இதற்கும். காசையும் மின்சாரத்தையும் எக்கச்சக்கமாக மிச்சமாக்கலாம். வீட்டுக்குத் தேவை பிரகாசம். வீடு வெளிச்சமாக இருந்தாலே மங்களகரமாகவும் லெட்சுமி கடாட்சமும் நிறைந்திருக்கும். வீட்டை பளிச்சென வைத்திருக்க எல்டி டியூப்லைட்டுகள் பெரிதும் பயன்படும்.
(5 / 9)
நகரங்களில் ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்ஸி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். போதாக்குறைக்கு கூடுதலாக இப்போது ஏசி, வேக்யூம் கிளீனர், வாட்டர் ப்யூரிஃபையர் வேறு சேர்ந்துவிட்டன. இப்போது குளிர்காலம் என்பதால் ஏசி பயன்பாடு அவ்வளவாக இருக்காது. ஆனால் இதில் நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இதுபோன்ற வீட்டு உபயோக சாதனங்கள் இப்போது ஸ்டார் தர நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் 5 ஸ்டார்கள் அதிகபட்சம். எனவே நீங்கள் வாங்கும் சாமான்கள் 5 ஸ்டார்கள் தரம் உள்ளதாக வாங்கினால் மின்சாரச் செலவு மிகக் கணிசமாகக் குறையும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
(6 / 9)
எல்லாம் சரி ராஜா தமிழ்நாட்டுல ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை ரீடிங் எடுக்குறாங்களே இதை எப்படி சமாளிப்பது என்றால் அதற்கும் சிறந்ததொரு வழி இருக்கிறது. இல்லத்தரசிகள் இதற்காக சற்று மெனக்கெட்டால் போதும். தினசரி சமைக்கும் உணவை முன்கூட்டியே திட்டமிடுங்கள். காலை டிபனுக்கு செய்த சட்னியை ஒரேமுறை செய்து இரவுக்கு ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுங்கள். எப்படியிருந்தாலும் ஒரு ஃபிரிட்ஜ் வேலை செய்ய தினமும் 2 யூனிட்டுகளாவது ஆகும். அதனால் சட்னியை வைப்பதால் கூடுதல் செலவு இருக்காது. இரவு புதிதாக சமைக்க மிக்ஸியைப் பயன்படுத்தத் தேவையில்லை.
(7 / 9)
டிஜிட்டல் மின்சார மீட்டர்கள் வந்துவிட்டதால் முன்புபோல் இப்போது திருட்டுத்தனமாக மின்சார மீட்டரில் 'சூடு' வைக்க முடியாது. அது நேர்மைக்கு உகந்ததல்ல. எனவே வாராவாரம் அல்லது 15 நாள்களுக்கு வீட்டுக்கு ஆன மின்சாரச் செலவைக் கணக்கிடுங்கள். டிஜிட்டல் மீட்டரில் எப்படி அறிந்து கொள்வது என்று நினைத்தால் மின்வாரிய ஊழியர் வந்து கணக்கெடுக்கும்போது விஷயத்தைச் சொல்லி கேளுங்கள். சந்தோஷமாகச் சொல்லித் தருவார்கள். அடுத்த 15 நாளில் எப்படி மின்செலவைக் குறைக்கலாம் எனத் திட்டமிடுவதற்கு ஏதுவாக இருக்கும்.
(8 / 9)
பயன்படுத்தாதபோது மின்சாதனங்களின் பிளக்குகளை ஸ்விட்சிலிருந்து கழற்றி விடுங்கள். சில இணைப்புகளில் மின்கசிவுகள் இருந்தால் அதை இவ்வாறு தடுக்கலாம். ஒவ்வொரு மாதமும் மின்சாரச் செலவு பட்ஜெட்டைக் கவனிப்பதுபோன்று மறக்காமல் செலவாகும் மின்யூனிட்டுகளையும் கண்காணியுங்கள். இது எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம் மின்சாரக் கட்டணத்தைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். நாம் பயன்படுத்தும் யூனிட் ஸ்லாப்புக்கு ஏற்ப கட்டணம் பன்மடங்காகக் கூடும். எனவே ரீடிங்குக்கு 20 நாட்களுக்கு முன்பாக சுதாரித்துக் கொண்டு சிக்கனமாக மின்சாரத்தைச் செலவிட்டு குறைந்தபட்சம் வழக்கத்தைவிட ஒரு மடங்கு குறைந்த ஸ்லாப்பில் கட்டணம் செலுத்தும்வகையில் செயல்படுங்கள்.
(9 / 9)
வண்டியை எடுத்து பெட்ரோலை செலவழித்து வரிசையில் காத்திருந்து மின்கட்டணம் செய்யாமல் டான்ஜெட்கோவின் ஆன்லைன் தளத்தில் செலுத்தினால் செலவு மிச்சம். சில ஆப்புகளில் இதற்கு மணிபேக் சலுகைகளும் உள்ளன. இந்த வழிமுறைகள் எல்லாம் கட்டாயம் உங்களது குடும்பச் செலவைக் கணிசமாகக் குறைக்கும். மிச்சப்பணத்தை வேறு நல்ல செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்.
மற்ற கேலரிக்கள்