Top 10 Tamil News: ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சிப் பொறுப்பு பறிப்பு முதல் திண்டுக்கல் சீனிவாசன் ஹாஸ்பிடலில் அனுமதி வரை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 Tamil News: ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சிப் பொறுப்பு பறிப்பு முதல் திண்டுக்கல் சீனிவாசன் ஹாஸ்பிடலில் அனுமதி வரை!

Top 10 Tamil News: ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சிப் பொறுப்பு பறிப்பு முதல் திண்டுக்கல் சீனிவாசன் ஹாஸ்பிடலில் அனுமதி வரை!

Karthikeyan S HT Tamil
Published Apr 15, 2025 09:50 AM IST

டாப் 10 தமிழ் நியூஸ்: தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பை இன்றைய காலை பொழுதின் டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

Top 10 Tamil News: ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சிப் பொறுப்பு பறிப்பு முதல் திண்டுக்கல் சீனிவாசன் ஹாஸ்பிடலில் அனுமதி வரை!
Top 10 Tamil News: ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சிப் பொறுப்பு பறிப்பு முதல் திண்டுக்கல் சீனிவாசன் ஹாஸ்பிடலில் அனுமதி வரை!

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி திடீர் நீக்கம்

பகுஜன் சமாஜ் (BSP) கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தைக் கவனித்து கொள்ளவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் கவனம் செலுத்தும் வகையில் பதவியிலிருந்து அவரை நீக்கம் செய்வதாக அக்கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் சமாஜ் ராஜாராம் அறிவித்துள்ளார். கட்சியின் மாநிலத் தலைவர் ஆனந்தன் மீது அண்மையில் பொற்கொடி புகார் கூறியிருந்த நிலையில் பொற்கொடி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

மாநில சுயாட்சி - தீர்மானம் கொண்டுவரும் முதல்வர்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்.15) மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முன்மொழிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாநில உரிமை மற்றும் அதிகாரத்தை ஒன்றிய அரசு பறித்து வரும் நிலையில், மாநில சுயாட்சி தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இரண்டாக உடையும் மதிமுக?..வைகோ சமரசம்

மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கும், துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையிலான மோதல் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க திருச்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதால், அக்கட்சி 2ஆக பிளவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இருவரையும் சமரசப்படுத்த முயற்சித்து வரும் வைகோ, வரும் 20ஆம் தேதி மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நடக்கும் என அறிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகல்

பாஜக உடன் கூட்டணி வைத்ததால், முன்னாள் MLA உட்பட பலர் அதிமுகவில் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். குறிப்பாக, அதிமுகவில் இருக்கும் இஸ்லாமியர்கள், கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படையாக இதுகுறித்து பேசப்பட்டது. இந்நிலையில், அதிமுக சிறுபான்மையினர் அணியின் முக்கிய நிர்வாகி கே.எஸ்.முகமது கனி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

காவலரின் தாயை நகைக்காக கொன்ற இளம்பெண் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவலர் விக்ராந்த் தாயார் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் செல்வரதியை போலீசார் கைது செய்தனர். வீட்டில் தனியாக இருந்த காவலரின் தாய் வசந்தாவை கொன்று 8 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்

61 நாள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஆண்டுதோறும் ஏப்.15 - ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. குமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்கு கடற்கரை பகுதியில் சுமார் 15,000 படகுகள் கடலுக்கு செல்லாது. இதனால் சென்னை, நாகை, தூத்துக்குடியில் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

அம்பேத்கரை புகழ்ந்து பேசிய ஆளுநர் ரவிக்கு அமைச்சர் கோவி செழியன் பதிலடி!

சனாதனத்திற்கு பிராண்ட் அம்பாசிடராக பேசிக் கொண்டிருக்கும் நீங்கள், சனாதனத்தை எதிர்த்த அம்பேத்கரை புகழ்வது பொருத்தமாகவா இருக்கிறது? இனிப்பும் உப்பு எப்படி ஒரே சுவை தர முடியும்? சனாதனத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே பட்டியலின மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களே! உங்களின் டபுள் ரோல் நடிப்பு தமிழ்நாட்டில் எடுபடாது என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் ஆளுநர் ரவி குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

‌“இந்தியர்களின் ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு காண, ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் சவூதி அரேபியா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 52,000 இந்திய ஹஜ் பயணிகளுக்கான தங்குமிடம் உறுதி செய்யப்படாததால் அவர்களின் பயணத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது." என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

பத்தாம் வகுப்பு தேர்வு இன்று நிறைவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் மே 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.

திண்டுக்கல் சீனிவாசன் ஹாஸ்பிடலில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.