Savukku Shankar: ‘கொளத்தூர் தன்ராஜ் எங்கே? ’ சேகர்பாபு பேசியதாக ஆடியோவை வெளியிட்ட சவுக்கு சங்கர்!
Savukku Shankar: ‘நான் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, துடைப்பம் மற்றும் செருப்புகளோடு பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்ததும் சேகர்பாபு தான். செல்வப்பெருந்தகையும், சேகர்பாபுவும், ஆர்ம்ஸ்ட்ராங் என்ற புள்ளியில் இணைகிறார்கள்’

Savukku Shankar: அமைச்சர் சேகர்பாபு, ஒருவருடன் உரையாடியதாக கூறப்படும் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சவுக்கு சங்கர். தன் வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவத்தை சுட்டிக்காட்டி, அது தொடர்பான வாதம் தான் இது என்றும் அவர் கூறியுள்ளார். அமைச்சர் சேகர்பாபு பேசியதாக கூறப்படும் அந்த ஆடியோவில் இருப்பது என்ன?, அது தொடர்பாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ள பதிவு என்ன? இதோ இங்கு காணலாம்:
சேகர்பாபு கீழ் செயல்படும் ரவுடி
‘கொளத்தூர் தன்ராஜ் என்பவர் சென்னை கொளத்தூரில் பழைய கார் வாங்கும் விற்கும் தொழில் செய்பவர். திமுகவின் முன்னாள் இளைஞரணி நிர்வாகி மகேஷ் குமாரின் வலதுகரம். சென்னை மாநகராட்சி 6வது மண்டல திமுக சேர்மேன் மற்றும் 6வது வார்டு கவுன்சிலர் சரிதாவின் கணவர்தான் மகேஷ் குமார். மகேஷ்குமாருக்கு வேலை, ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வேலைகளை செய்வது. அமைச்சர் சேகர்பாபு கீழ் செயல்படும் ஒரு ரவுடி என்று சொல்லலாம்.
கடந்த 24 மார்ச் 2025 அன்று எனது வீட்டில் மலத்தை வீசி நடந்த தாக்குதலை அமைச்சர் சேகர்பாபு சொல்லி மகேஷ் குமார் தனது வலதுகரம் கொளத்தூர் தன்ராஜிடம் சொல்கிறார். தன்ராஜுக்கு பேசியபடி சேகர்பாபு பணம் கொடுக்கவில்லை.
கொளத்தூர் தன்ராங் எங்கே?
இதனால், அமைச்சர் சேகர்பாபுவுக்கு தன்ராஜ் போன் செய்து, பேசியபோது அதை பதிவு செய்து வைக்கிறார். இந்த ஆடியோ பதிவு வாட்ஸப்பில் பரவுகிறது.
இதையடுத்து, சென்னை மாநகர காவல்துறையைச் சேர்ந்த 20 காவலர்கள் ரவுடி மகேஷ் குமார் தலைமையில் இவர் வீட்டுக்கு சென்று மிரட்டி போனை பறித்துள்ளனர். இப்போது கொளத்தூர் தன்ராஜ் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. சேகர் பாபுவின் உத்தரவில், 20 காவலர்களை அனுப்பியது ஆணையர் அருண் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை.
சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள ஆடியோவில் இருப்பது என்ன? இதோ கீழே..
ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் இணைகிறார்கள்
நான் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, துடைப்பம் மற்றும் செருப்புகளோடு பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்ததும் சேகர்பாபுதான் என்பது குறிப்பிடத்தக்கது. செல்வப்பெருந்தகையும், சேகர்பாபுவும், ஆர்ம்ஸ்ட்ராங் என்ற புள்ளியில் இணைகிறார்கள்.
இப்போது கொளத்தூர் தன்ராஜின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியே வந்தால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவாய் என சென்னை காவல்துறையால் மிரட்டப்பட்டுள்ளார்.
ஏன் இவ்வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். ஆளுங்கட்சியின் அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சம்பந்தப்பட்டிருந்தால் சிபி சிஐடி மட்டும் எப்படி நடவடிக்கை எடுக்கும்?’
என்று அந்த பதிவில் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
