Savukku Shankar: நில அபகரிப்பு பற்றிய பேச்சு.. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலை
Savukku Shankar: நில அபகரிப்பு பற்றிய பேச்சு.. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

Savukku Shankar: நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரிக்கும் வழக்குத் தொடர்பாக, தவறான தகவல்களை பரப்புவதாக கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று சென்னை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர். சவுக்கு என்னும் யூட்யூப் மற்றும் இணையதளத்தை நடத்தி வருகிறார். இதுதவிர, பல்வேறு ஊடகங்களில் பொதுப் பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் நில மோசடி தொடர்பாக தவறான தகவலைப் பரப்பியதாக, யூடியூப் சேனலில் பகிர்ந்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு நில மோசடி பிரிவு ஆய்வாளர் சிவ சுப்பிரமணியன் 2024ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் புகார் அளித்தார். இந்தப் புகாருக்குப் பதில் அளிக்க சவுக்கு சங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு:
அப்போது விசாரணைக்கு ஒத்துழைப்புத் தரவில்லை என, சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் டிசம்பர் 24ல் கைது செய்யப்பட்டார்.
அப்போது தனக்கு எதிராக மூன்று பிரிவுகளின் வழக்குப் பதிவாகியிருப்பதாகவும் அதில் இருந்து விடுபட ஜாமின் கோரி கீழமை நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், அங்கு அவரது ஜாமின் மனுக்கள் தள்ளுபடியாகின.
அதனைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில் சவுக்கு சங்கரின் ஜாமின் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் முன்பு, ஜனவரி 17ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன், சவுக்கு சங்கர் கைது செய்யும் அளவுக்கான குற்றம் செய்யவில்லை எனக் கூறி, ஜாமின் தந்தார்.
ஜனநாயகம் என்பது பல கருத்துக்களின் தன்மை கொண்டது: நீதிபதி
குறிப்பாக, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த தீர்ப்பில், ‘ஜனநாயகம் என்பது பல்வேறு கருத்துக்களின் தன்மை கொண்டது. ஒரு கருத்தில் ஆதாரம் இருந்தால் அது நிலைக்கும். இல்லையென்றால் அது நிற்காது.
ஒரு கருத்து சொன்னதற்காக சவுக்கு சங்கர் மீது வழக்குபோட்டிருப்பது பாசிசம். வழக்கு என்பது வேறு. கைது என்பது வேறு என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் கூறியிருக்கிறது. அப்படியிருக்க, இப்படி தேவையற்ற கைது நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து இருக்கிறது’என சொல்லி ஜாமின் கொடுத்தார்.
இந்நிலையில் ஜாமின் தொடர்பான சுய உறுதிமொழி ஆவணம் உள்ளிட்ட சில டாக்குமென்ட்கள் இணையத்தில் பதிவேற்றுவதில் ஏற்பட்ட பழுது காரணமாக அவரை விடுவிப்பது சற்று கால தாமதம் ஆனது.
டாக்குமென்ட்கள் பதிவு; கிடைத்த ஜாமின்:
அதன்பின், இணையத்தில் சவுக்கு சங்கர் குறித்த டாக்குமென்ட்கள் பதிவானதும், ஜாமினில் விட்டுவிடவேண்டும் எனக்கூறி, தனது தீர்ப்பை திருத்தி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருத்தி எழுதியதின்பேரில், இன்று மாலை டாக்குமென்ட்கள் அப்லோட் செய்யப்பட்டபின், சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலையானார்.
முன்னதாக, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீஸார் பற்றி தவறாகப் பேசியதற்காக, 2024ஆம் ஆண்டு பல்வேறு இடங்களில் வழக்குகள் பதியப்பட்டு, அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதன்பின், இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த பின்னணியில் தான், உச்ச நீதிமன்றத்தில் அவர் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்தார். அப்போது அவரது சட்ட நடவடிக்கைகளை விசாரித்து உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்