Savukku Shankar: ‘இப்படி ஆயிடுச்சே சிவாஜி..’ ஓபிஎஸ்.,யை எக்ஸ் தளத்தில் கலாய்த்து வரும் சவுக்கு சங்கர்!
Savukku Shankar: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, ஓபிஎஸ் நிலையை, பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர், தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு செய்து, கலாய்த்து வருகிறார். அவரது பல பதிவுகள், பலருக்கும் சுவாரஸ்யமாக இருந்தாலும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு பயங்கர கோபத்தை ஏற்படுத்திருக்கிறது.

Savukku Shankar: தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக தலைமையை ஏற்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவர்களை தங்களின் இரு கரம் போல பாவித்து வந்தார். அவர்களும், அதிமுக தங்கள் வசம் வரும் என்கிற நம்பிக்கையில் இருந்தனர். குறிப்பாக, ஓபிஎஸ், ‘கண்டிப்பாக அதிமுக.,வில் தான் இணையும் நாள் வரும்’ என்று காத்திருந்தார்.
அவர்களின் எண்ணப்படியே, எடப்பாடி பழனிசாமியும், பாஜக எதிர்ப்பு நிலையில் இருந்தார். இதனால், ‘மேலிட’ ஆதரவு கிடைக்கும் என்று ஓபிஎஸ் நம்பி வந்ததோடு, பல கோயில்களில் வழிபாடும் நடத்தி வந்தார். இந்நிலையில் தான், யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டாக, அதிமுக-பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைத்தார். அத்தோடு, பாஜகவின் தமிழக தலைவரும் மாற்றப்படுகிறார்.
இது இரண்டுமே, ஓபிஎஸ்.,யின் எதிர்பார்ப்புகளுக்கு ஒட்டுமொத்தமாக கொல்லி வைத்துள்ளது. அதோடு, ‘ஓபிஎஸ்.. டிடிவி விவகாரம், அதிமுகவின் உட்கட்சி விவாரம் என்றும், அதில் நாங்கள் தலையிடப் போவதில்லை,’ என்றும் அமித்ஷா நேரடியாகவே தெரிவித்துவிட்டார். இந்நிலையில், தன் கண் முன் திறந்திருந்த கதவு, ‘படார்’ என அடைபட்ட நிலையில், ஓபிஎஸ் தவித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, ஓபிஎஸ் நிலையை, பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர், தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு செய்து, கலாய்த்து வருகிறார். அவரது பல பதிவுகள், பலருக்கும் சுவாரஸ்யமாக இருந்தாலும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு பயங்கர கோபத்தை ஏற்படுத்திருக்கிறது. இருந்தாலும், எடப்பாடி-பாஜக இணைந்த கோபத்தை விட அது பெரிய கோபம் இல்லை என்பதால், ஒரே நேரத்தில் எத்தனை விசயத்தை தாங்குவது என்கிற ரீதியில் அமைதி காக்கின்றனர். இதோ சவுக்கு சங்கர், எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சில கருத்துக்கள்:
சவுக்கு சங்கரின் இந்த எக்ஸ் தளப்பதிவை, பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

டாபிக்ஸ்