Modi: ’உலகம் இந்தியாவின் காலடியில் விழ வைக்க மீண்டும் மோடி பிரதமர் ஆக வேண்டும்!’ பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்!
”சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என்று பிரதமர் மோடி சொல்லி உள்ளார்”

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சற்று நேரத்தில் பல்லடம் வர உள்ளார். இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், இன்னும் ஓரிரு வாரங்களில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் ஒரு முறை அட்சியில் அமர்ந்து உலகை இந்தியாவின் காலடியில் விழ வைக்க கூடிய காலத்தை கொண்டு வருவதற்காக நாமெல்லாம் பெரும் எதிர்பார்ப்போடு இருந்து வருகிறோம்.
இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி குறைந்தப்ட்சம் 25 இடங்களை கைப்பற்றும் என நம்முடைய மாநிலத் தலைவர் கூறி உள்ளார். அதை நிறைவேற்றும் களப்பணியில் இறங்கும் கட்டாயம் நமக்கு உள்ளது.
நேரு உட்பட எந்த பிரதமரும் தமிழ் மொழியின் பெருமையை பெற்றி இந்த அளவுக்கு மேன்மை படுத்தி சொன்னதாக சரித்திரமே கிடையாது. அவர்களுக்கு தெரிந்த ஒற்றை தமிழ்வார்த்தை வணக்கம் என்பது மட்டும்தான். அதையும் மேடையில் எழுதி கொடுத்துவிடுவார்கள். வடக்கில் உள்ளவர்கள் தமிழை கற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ஜி சொன்னார்கள்.
தமிழ் பழமையான மொழி என்பது எல்லோரும் சொல்லக்கூடிய விஷயம், அதை வடக்கே உள்ளவர்கள் சொல்ல மாட்டார்கள், ஆனால் நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலகின் அனைத்து மொழிகளுக்கும் தாய் தமிழ் என்று சொல்லி உள்ளார்.
சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என்று பிரதமர் மோடி சொல்லி உள்ளார். தமிழ்நாட்டின் முன்னேற்றம், தமிழர்கள் முன்னேற்றம், இலங்கை தமிழர்கள் முன்னேற்றம் ஆகியவற்றை பிரதமர் மோடி செய்துள்ளார். இந்த உலகம் பிரதமர் மோடியின் ஆளுமையை ஏற்றுக் கொண்டு விட்டது. பிரதமர் மோடியின் பார்வை நம்மீது படாதா என உலகம் ஏங்கி கொண்டிருக்கிறது. 400க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
