Pongal Gift : பொங்கல் பரிசுத் தொகுப்பு.. இன்று முதல் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம்!
வரும் 10-ம் தேதி முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகின்றன. வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன் பொங்கல் பரிசுதொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் இந்த ஆண்டுக்கான பொங்கலை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் பணமும் வழங்கப்பட வேண்டும் என அரசியல் கட்சி சார்பில் வலியுறுத்தபபட்டன. இதற்கிடையே பொங்கல் பரிசாக பணமும் வழங்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து தமிழ்நாடு மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பொங்கல் பரிசாக ரூ. 1000 பணமும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொங்கல் திருநாளை சிறப்பாக பொதுமக்கள் கொண்டாடிடவும், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுதுறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து இதர அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ. 1000 பொங்கல் பரிசாக நியாயவிலை கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னர் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாதந்தோறும் 15ஆம் தேதி வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பொங்கலை முன்னிட்டு முன்னரே கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை பெற்று வரும் 1 கோடியே 15 லட்சம் பேரில் கணக்கில் வரும் 10ஆம் தேதியே அதற்கான தொகை அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை 15-ம் தேதி கொண்டாடப்படவுள்ளதால், 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு முன்னதாகவே தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் ரூ.1000 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிட அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்படவுள்ளது.
ரேசன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் வழக்கம்போல பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் முறை பின்பற்றப்படவுள்ளது. ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த தேதியில், எந்த நேரத்தில் பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டு டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.
ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வரும் 9-ம் தேதி வரை 3 நாட்கள் டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளது. வரும் 10-ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. வரும் 14-ம் தேதிக்குள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்