Pongal Gift: வந்தாச்சு குட்நியூஸ்.. நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் !
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன் பொங்கல் பரிசுதொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் இந்த ஆண்டுக்கான பொங்கலை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் பணமும் வழங்கப்பட வேண்டும் என அரசியல் கட்சி சார்பில் வலியுறுத்தபபட்டன. இதற்கிடையே பொங்கல் பரிசாக பணமும் வழங்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.