TVK Vijay: ’இனி ஆட்டமே வேற! ஆட்சியை பிடிப்பாரா விஜய்?’ ஆதரவை நீட்டும் கொங்கு!’ வெளியான அதிர்ச்சி கருத்து கணிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tvk Vijay: ’இனி ஆட்டமே வேற! ஆட்சியை பிடிப்பாரா விஜய்?’ ஆதரவை நீட்டும் கொங்கு!’ வெளியான அதிர்ச்சி கருத்து கணிப்பு!

TVK Vijay: ’இனி ஆட்டமே வேற! ஆட்சியை பிடிப்பாரா விஜய்?’ ஆதரவை நீட்டும் கொங்கு!’ வெளியான அதிர்ச்சி கருத்து கணிப்பு!

Kathiravan V HT Tamil
Dec 12, 2024 04:06 PM IST

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பீர்களா? என்ற கேள்விக்கு ஆம் என்று 41% பேரும். இல்லை என்று 27% பேரும், தேர்தல் நேரத்தில் முடிவு என 28% பேரும், கருத்தில்லை என 4% பேரும் கருத்து கூறி உள்ளனர்.

TVK Vijay: ’இனி ஆட்டமே வேற! ஆட்சியை பிடிப்பாரா விஜய்?’ ஆதரவை நீட்டும் கொங்கு!’ வெளியான அதிர்ச்சி கருத்து கணிப்பு!
TVK Vijay: ’இனி ஆட்டமே வேற! ஆட்சியை பிடிப்பாரா விஜய்?’ ஆதரவை நீட்டும் கொங்கு!’ வெளியான அதிர்ச்சி கருத்து கணிப்பு!

எந்தெந்த தரப்பினர் ஆதரவு?

இதில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக இளைஞர்கள் - 60% பேரும், தொழிலாளர்கள் 19% பேரும், விவசாயிகள் - 7 சதவீதம் பேரும், வியாபாரிகள் - 4 பேரும், முதல் முறை வாக்காளர்கள்  45% பேரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு உண்டா?

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பீர்களா? என்ற கேள்விக்கு ஆம் என்று 41% பேரும். இல்லை என்று 27% பேரும்,  தேர்தல் நேரத்தில் முடிவு என 28% பேரும், கருத்தில்லை என 4% பேரும் கருத்து கூறி உள்ளனர். 

விஜய் வந்தால் மாற்றம் உண்டாகுமா?

விஜய் வந்தால் மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு ஆம் என்று  47% பேரும்,  இல்லை என்று 36% பேரும்,  கருத்து இல்லை என்று 17% பேரும் தெரிவித்து உள்ளனர். 

எம்.ஜி.ஆரா? என்.டி.ஆரா?

எம்ஜிஆர், என்டிஆர் போல விஜய் ஜெயிக்க (முதல்வராக) முடியுமா? என்ற கேள்விக்கு, முடியும் என்று  42% பேரும், முடியாது என்று 41% பேரும், கருத்து இல்லை என்று 17% பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர். 

மண்டல வாரியாக விஜய்க்கு எவ்வளவு ஆதரவு?

மண்டல வாரியாக எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளில் கொங்கு மண்டலத்தில் 25%, தென் மண்டலத்தில் 19%, காவிரிப் படுகை மண்டலத்தில் 17%, வடக்கு மண்டலத்தில் 31%, சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் 35% பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். 

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி?

விஜய்யின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கிறது? என்ற கேள்வுக்கு திருப்தி என 48% பேரும், திருப்தி இல்லை என 14% பேரும், பரவாயில்லை என 29% பேரும், ஒன்றுமில்லை என 9% பேரும் தெரிவித்து உள்ளனர். 

விஜயின் கொள்கைகள் எப்படி உள்ளது?

விஜய் கட்சியின் கொள்கைகள் எப்படி இருக்கின்றன என்ற கேள்விக்கு, சிறப்பு என 45% பேரும், மோசம் என 7% பேரும், பழைய பல்லவி என 29% பேரும்,  கருத்து இல்லை என 19% பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர். 

திமுக, அதிமுகவுக்கு மக்கள் மாற்றா?

திமுக, அஇஅதிமுகவுக்கு மாற்றாக மக்கள் விஜய்யை ஏற்றுக் கொள்வார்களா? என்ற கேள்விக்கு, ஆம் என்று 44% பேரும், இல்லை என்று 32% பேரும், கருத்து இல்லை என 24% பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர். 

யாரை போல் விஜய் வருவார்?

யாரைப் போல் வருவார் விஜய்? என்ற கேள்விக்கு விஜயகாந்த் போல் வருவார் என 42% பேரும், எம்ஜிஆர்  போல் என 39% பேரும், கமல்ஹாசன் போல் என 9% பேரும், கருத்து இல்லை என 10% பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.