Republic Day 2023: 74 ஆவது குடியரசு தினம் - அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Republic Day 2023: 74 ஆவது குடியரசு தினம் - அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

Republic Day 2023: 74 ஆவது குடியரசு தினம் - அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

Aarthi V HT Tamil
Jan 26, 2023 09:39 AM IST

74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

 

பிரதமர் மோடி

நாட்டின் மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க நாம் ஒற்றுமையாக முன்னேற விரும்புகிறோம்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று, நாட்டை விடுவிக்கவும், வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியலமைப்பு இயற்றியவர்கள் மற்றும் துணிச்சலான வீரர்கள் அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

நமது ராணுவத்துக்கு வணக்கம் செலுத்துவோம்; பாரத இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை காத்து, எதிரி நடவடிக்கைகளை முறியடித்து இன்னுயிரை தியாகம் செய்த தீரம் மிக்க நம் வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

இந்திய குடியரசு பல சாதனைகளை படைத்திருந்தாலும், சமீபகாலத்தில் பல சவால்களை சந்தித்து வருகிறது. அரசமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அத்தகைய உரிமைகளை பாதுகாத்து, மத, சமூக, நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்கும் வகையில், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள்வதன் மூலமாகவே இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்

ஒவ்வொரு மனிதரும் சமமாக நடத்தப்படும்போதுதான் குடியரசு அதன் முழுமையான அர்த்தத்தை எட்டுகிறது. நாட்டின் இறையாண்மை குடிமக்களிடமே நிலைகொண்டுள்ளது என்பதை உணர்த்திய முன்னோடிகளை வணங்கி சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய உறுதி ஏற்போம். குடியரசு தின நல்வாழ்த்துகள்.

ஓ.பன்னீர் செல்வம்

அந்நியர்களின் அடக்கு முறையை தகர்த்தெறிந்து இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசித்த பின், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்த திருநாளான ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.

இத்திருநாளில் தாய்த் திருநாட்டில் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக நீதி தழைத்தோங்க, நாம் அனைவரும் சாதி, மதம், மொழி உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்வோம் என உறுதியேற்போம்.

எடப்பாடி பழனிசாமி

அனைவருக்கும் சமஉரிமை, சாமானியருக்கும் சமநீதி, வேறுபாடற்ற சமூகம் போன்ற உயரிய கோட்பாடுகளை கொண்ட இந்திய அரசியலமைப்பு சாசனம் இயற்றப்பட்ட நன்னாளான குடியரசு தினத்தில், மக்களாட்சி மலர பாடுபட்ட மாமனிதர்களின் ஈடு இணையற்ற தியாகங்களை போற்றி வணங்குகிறேன்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

74வது குடியரசு தினத்தில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தினத்தில், உலகின் மிகப்பெரிய மற்றும் துடிப்பான ஜனநாயகத்தின் குடிமகனாக பெருமை கொள்வோம். ஜெய் ஹிந்த்!

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.