Tamil News  /  Tamilnadu  /  Police Vehicle Hits Two Motor Cycles Near Trichy And One Died On The Spot

Accident: திருச்சி அருகே போலீஸ் வாகனம் மோதி விபத்து - பெண் பலி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 02, 2024 03:22 PM IST

திருச்சி - கரூர் இடையே சீலைபிள்ளையார்புத்தூரில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது போலீஸார் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இருவர் காயம் அடைந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய போலீஸ் வாகனம்
விபத்தை ஏற்படுத்திய போலீஸ் வாகனம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரின் வாகனம் ஆற்றம் கரையிலிருந்து சீலைப்பிள்ளையார் பேருந்து நிலையத்தின் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

முதலில் இளைஞர் ஒருவர் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விட்டு, பின்னர் எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் இரண்டாவது மோதிய இருசக்கர வாகனம் போலீசார் வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டது. விபத்தின் போது ஏற்பட்ட பலத்த சத்தத்தால் அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், போலீஸ் வாகனத்தில் அடியில் சிக்கியிருந்த இரு சக்கர வாகனத்தை மீட்டனர். இதைத்தொடர்ந்து அதில் பயணித்து வந்த குப்பாயி (45) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கிய மற்ற நபர்களான தீனதயாளன், தீபன் ஆகியோர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்