NewYear Guidelines: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட காவல் துறை!
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு காவல்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் மற்றும் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், ‘’மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவலின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர், சாலைகளில் சாகசங்களில் ஈடுபடுவோரின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை பகுதிகளில் மது குடிக்க அனுமதி கிடையாது’’ என கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9