அனிமேஷன் மூலம் விழிப்புணர்வு - போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறை நடவடிக்கை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அனிமேஷன் மூலம் விழிப்புணர்வு - போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறை நடவடிக்கை

அனிமேஷன் மூலம் விழிப்புணர்வு - போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறை நடவடிக்கை

Divya Sekar HT Tamil
Apr 03, 2022 02:13 PM IST

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வுக்காக அனிமேஷன் மூலம் வீடியோக்களை மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறை உருவாக்கியுள்ளது.

<p>அனிமேஷன் மூலம் விழிப்புணர்வு</p>
<p>அனிமேஷன் மூலம் விழிப்புணர்வு</p>

அதில்,”கடந்த 2021 டிசம்பர் முதல் கடந்த ஜனவரி வரை நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக, இந்த மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 27 வரை ஒரு மாதம் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்தவேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் அவர்கள் மீது குண்டர்சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் பதுக்கல் மற்றும் விற்பனை சங்கிலியை உடைக்க மொத்தக் கொள்முதல், விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதைப்பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி அவர்களை இப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களைக் கொண்டு காவல் நிலைய ஆய்வாளர்கள் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி, ரகசிய தகவல் சேகரிக்க வேண்டும். பார்சல் மூலம் மாத்திரை, போதை மருந்துகள் விற்பனை செய்பவர்களைக் கண்காணிக்க தனிப்படை அமைக்க வேண்டும். இந்த பணிகளை சட்டம் ஒழுங்குகூடுதல் டிஜிபி தினமும் கண்காணித்து மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அனுப்புதல் வேண்டும். அதேபோல், சென்னை,ஆவடி, தாம்பரம் காவல் ஆணையர்கள் நேரடியாக இந்தப் பணியில் கவனம் செலுத்தி தங்கள் அறிக்கையை அனுப்ப வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், DAD (Drive Against Drug) என்ற பெயரில் போதைப்பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையை தமிழ்நாடு காவல் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் குட்கா, பான் மசாலா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொண்டு வருகிறது.

போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை துண்டுப் பிரசுரங்களையும் காவல் துறை வழங்கி, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது, நவீன காலத்திற்கு ஏற்ப போதைப்பொருளினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மீம்ஸ்கள் மூலம் காவல் துறை விழிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

DAD என்ற பெயரில் சமூக வலைதளப்பக்கம் உருவாக்கி, அதில் மீம்ஸ்கள் மூலமாக போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், டக்கர் பாண்டி, டிஜே தேவ் என்ற பெயரில் அனிமேஷன் கதாபாத்திரங்களை உருவாக்கி போதைப்பொருளுக்கு எதிரான அனிமேஷன் வீடியோக்களை போலீசார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, டக்கர் பாண்டி, நடிகர் ரஜினிகாந்த் சினிமா வசனங்களை பயன்படுத்தி போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு செய்யும் அனிமேஷன் காட்சிகளை பொதுமக்கள் கவரும் வகையில் போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும், டிஜே ரேவ் என்ற கதாபாத்திரம் நடிகர் அஜித்தின் நடித்த 'வலிமை' மற்றும் நடிகர் விஜய் நடித்த 'மாஸ்டர்' இரண்டிலும் போதைப்பொருளுக்கு எதிராக படம் நடித்துள்ளதை சுட்டிக்காட்டி அனிமேஷன் வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்ந்து போதை பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை குறைக்கும் நடவடிக்கையில் தற்போது போலீசார் களமிறங்கியுள்ளனர். அதற்கு உதவும் வகையில் இதுபோன்று விழிப்புணர்வு வீடியோக்களை போலீசார் தொடர்ந்து வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.