சாதிவாரி சர்வே: கர்நாடகாவை பார்த்து கத்துக்கோங்க! தமிழக அரசுக்கு பாடம் எடுக்கும் அன்புமணி ராமதாஸ்!
"தேசிய அளவில் மத்திய அரசால் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் விவரங்கள் தேசிய அளவில் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிப்பதற்கு மட்டும் தான் போதுமானதாக இருக்கும்"

சாதிவாரி சர்வே: கர்நாடகாவை பார்த்து கத்துக்கோங்க! தமிழக அரசுக்கு பாடம் எடுக்கும் அன்புமணி ராமதாஸ்!
தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி சர்வே மேற்கொள்ள வேண்டியது ஏன் என்பதை கர்நாடகத்தின் பட்டியலின சர்வேயிலிருந்து பாடம் கற்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடகாவில் சாதிவாரி சர்வே
கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கத்துடன் அங்கு பட்டியல் வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ள 101 சாதிகளின் சமுக பின் தங்கிய நிலை, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வதற்கான சாதிவாரி சர்வே நேற்று தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் பட்டியலின மக்களுக்கு சமூகநீதி வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
