PMK: ’வரலாற்றிலேயே வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் யார் தெரியுமா?’ உடைத்து பேசிய அன்புமணி!
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு தர மனது இல்லை. நானும், ஐயாவும் முதலமைச்சரை தனியாக சென்று பலமுறை சந்தித்தோம். அப்போது ’நான் செய்கிறேன்’ என்று சொல்லி நம்பிக்கை ஊட்டினார். சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் கூட்டி நான் தருகிறேன் என்று சொன்னார். ஆனால் அதற்கு பிறகு அவர் அதை செய்யவில்லை.

வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர்களின் வரலாற்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் இடம் பெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
மணிமண்டபம் கட்டுவார் உள் ஒதுக்கீடு தரமாட்டார்!
சேலத்தில் நடைபெற்ற பாமக கட்சி நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட வன்னியர் மக்கள் படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று போராட்டம் நடந்தது. ஆனால் முதலமைச்சர் அவர்கள் மணிமண்டபம் கட்டுவேன், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தரமாட்டேன் என்று உள்ளார்.
வரலாற்றில் அதிக துரோகம் செய்த முதலமைச்சர்!
உங்களிடம் எல்லா அதிகாரமும் உள்ளது. ஒரு கையெழுத்து போட்டால் போதும், இதை அவரால் தர முடியவில்லை. தமிழ்நாடு வரலாற்றில் வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் யார் என்று சொன்னால் வரலாற்றில் மு.க.ஸ்டாலின் என்றுதான் சொல்வார்கள்.
