10,11ஆம் பொதுத்தேர்வு முடிவுகள்: ‘வட மாவட்டங்களே கடைசி இடம்; கல்வியில் விடியல் கிடைப்பது எப்போது?' அன்புமணி வேதனை!
”வடமாவட்டங்கள் தொடர்ச்சியாக பின்தங்கி வருவது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் அரியலூர், தருமபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் முதல் 15 இடங்களில் வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது”

10,11ஆம் பொதுத்தேர்வு முடிவுகள்: ‘வட மாவட்டங்களே கடைசி இடம்; கல்வியில் விடியல் கிடைப்பது எப்போது?' அன்புமணி வேதனை!
10,11ஆம் பொதுத்தேர்வு முடிவுகளிலும் வட மாவட்டங்களே கடைசி இடம் கிடைத்து உள்ள நிலையில், கல்வியில் விடியல் கிடைப்பது எப்போது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
10,11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 93.80 விழுக்காடும், 11&ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் 92.09 விழுக்காடு மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அதே நேரத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தோற்ற மாணவர்கள் அதை நினைத்து கவலைப்படாமல், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் துணைத் தேர்வுகளை புத்துணர்வுடனும், கவனமாகவும் எழுதி, தேர்ச்சியடைந்து மேல்நிலை வகுப்பில் சேர வாழ்த்துகிறேன்.