Ramadoss: ’பல்கலைக்கழகங்களா? பள்ளிக்கூடங்களா?’ யூஜிசியை அலறவிட்ட மருத்துவர் ராமதாஸ்!
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாநில அரசின் நிதி மற்றும் நிலத்தில் உருவாக்கப் பட்டவை. பல பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. அவற்றுக்கு தீர்வு காண பல்கலைக்கழக மானியக்குழு எந்த வகையிலும் உதவுவதில்லை

பல்கலைக்கழகங்களை பள்ளிக்கூடங்களாக நினைத்து அவற்றின் அன்றாட செயல்களில் மானியக்குழு தலையிடக் கூடாது, வரைவு விதிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
மனீஷ் ஜோஷிக்கு கடிதம்!
பல்கலைக்கழக மானியக்குழு (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தப்பட்சத் தகுதிகள் மற்றும் உயர்கல்வியின் தரத்தைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) விதிமுறைகள் 2025&க்கான வரைவை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. அதன்மீது உயர்கல்வித்துறையினரும், பொதுமக்களும் ஒரு மாதத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று மானியக் குழு தெரிவித்திருந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துகளை பல்கலைக்கழகக் கழக மானியக் குழுவின் செயலாளர் மனீஷ் ஜோஷிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.
மாநில தன்னாட்சிக்கு பாதிப்பு
அதில், பல்கலைக்கழக மானியக்குழு (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்த பட்சத் தகுதிகள் மற்றும் உயர்கல்வியின் தரத்தைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) விதிமுறைகள் 2025&க்கான வரைவு குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.
