‘முடிந்துபோனதை பற்றி பேச வேண்டாம்’ பாமக நிறுவனர் ராமதாஸ் பகீர் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘முடிந்துபோனதை பற்றி பேச வேண்டாம்’ பாமக நிறுவனர் ராமதாஸ் பகீர் பேட்டி!

‘முடிந்துபோனதை பற்றி பேச வேண்டாம்’ பாமக நிறுவனர் ராமதாஸ் பகீர் பேட்டி!

Kathiravan V HT Tamil
Published Jun 07, 2025 02:59 PM IST

”அன்புமணி ராமதாஸுடனான சமீபத்திய சந்திப்பு குறித்த கேள்விகளுக்கு, "பின்னர் பதிலளிக்கிறேன்" என்று கூறி, மேலும் விவரங்கள் அளிக்காமல் தவிர்த்தார்”

‘முடிந்துபோனதை பற்றி பேச வேண்டாம்’ பாமக நிறுவனர் ராமதாஸ் பகீர் பேட்டி!
‘முடிந்துபோனதை பற்றி பேச வேண்டாம்’ பாமக நிறுவனர் ராமதாஸ் பகீர் பேட்டி!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். பாமகவில் நிலவி வரும் உட்கட்சி குழப்பங்கள் மற்றும் கூட்டணி முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு என்று உறுதியாகக் கூறினார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடையே நிலவும் குழப்பங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ராமதாஸ், கடந்த 2024 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் பாஜகவுடன் இணைந்தது கட்சிக்கு உள்ளே பிரச்சனைகளை ஏற்படுத்தியதாகக் கருதப்படுவது குறித்து பேசும்போது, "முடிந்து போன விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம், இனி நடக்கப் போவதைப் பற்றி பேசுவோம்" என்று தெரிவித்தார். மேலும், கட்சித் தலைவர் பொறுப்பு மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பதவிகள் குறித்த கேள்விகளுக்கு, "பேசி முடிவு செய்வோம்" என்று கூறி, விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

"கூட்டணி முடிவு மற்றும் உட்கட்சி சிக்கல்கள்"

பாமகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகள் மற்றும் கூட்டணி முடிவு குறித்து ராமதாஸ் மேலும் விளக்கமளித்தார். "கூட்டணி முடிவு செய்ய இது சரியான நேரம் இல்லை. ஒன்பது மாதங்களே உள்ள நிலையில், பேசி முடிவு செய்யப்படும்," என்று அவர் கூறினார். பாஜகவிடமிருந்து கூட்டணி அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு, அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை, ஆனால் எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு என்று மீண்டும் வலியுறுத்தினார். அன்புமணி ராமதாஸுடனான சமீபத்திய சந்திப்பு குறித்த கேள்விகளுக்கு, "பின்னர் பதிலளிக்கிறேன்" என்று கூறி, மேலும் விவரங்கள் அளிக்காமல் தவிர்த்தார்.

ராமதாஸ், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் குறித்த வதந்திகளை மறுத்து, கட்சியின் ஒற்றுமை மற்றும் எதிர்காலத் திட்டங்களை மையப்படுத்தி பேசினார். "நாங்கள் எந்த அணியில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த அணியில் இருப்போம்," என்று நகைச்சுவையுடன் கூறி, கூட்டணி முடிவு குறித்து தெளிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று உறுதியளித்தார்.