பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ’வரும் தேர்தலில் படுத்துக் கொண்டே ஜெயிப்பது எப்படி?’ மருத்துவர் ராமதாஸ் பேட்டி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ’வரும் தேர்தலில் படுத்துக் கொண்டே ஜெயிப்பது எப்படி?’ மருத்துவர் ராமதாஸ் பேட்டி

பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ’வரும் தேர்தலில் படுத்துக் கொண்டே ஜெயிப்பது எப்படி?’ மருத்துவர் ராமதாஸ் பேட்டி

Kathiravan V HT Tamil
Published May 16, 2025 01:33 PM IST

”இக்கூட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் வராதது ஏன் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் வரலாம்; அல்லது வந்து கொண்டு கொண்டு இருக்கலாம் என பதிலளித்தார். பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வராதது குறித்த கேள்விக்கு, மாநாட்டு வேலைகளை செய்ததால் அவர்களில் சிலர் களைப்போடு இருக்கலாம் என கூறினார்”

பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ’வரும் தேர்தலில் படுத்துக் கொண்டே ஜெயிப்பது எப்படி?’ மருத்துவர் ராமதாஸ் பேட்டி
பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ’வரும் தேர்தலில் படுத்துக் கொண்டே ஜெயிப்பது எப்படி?’ மருத்துவர் ராமதாஸ் பேட்டி

50 தொகுதிகளில் வெற்றி இலக்கு: "படுத்துக்கொண்டே ஜெயிக்கும்" வித்தை

டாக்டர் ராமதாஸ் பேசுகையில், 50 தொகுதிகளில் "படுத்துக்கொண்டே ஜெயிப்பது எப்படி" என்ற வித்தையை தான் கற்றுக்கொடுத்திருப்பதாகவும், அவர்களிடமிருந்தும் யோசனைகளைக் கேட்டறிந்ததாகவும் கூறினார். ஒரு மாதத்தில் தேர்தல் வைக்கப்பட்டாலும், 50 தொகுதிகளில் குறைந்தது 40 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெற்றி பெறுவது எப்படி, உழைப்பது எப்படி என்பது குறித்து யோசனைகளைப் பரிமாறிக்கொள்வதற்காகவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அன்புமணி வராதது ஏன்?

இக்கூட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் வராதது ஏன் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் வரலாம்; அல்லது வந்து கொண்டு கொண்டு இருக்கலாம் என பதிலளித்தார். பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வராதது குறித்த கேள்விக்கு, மாநாட்டு வேலைகளை செய்ததால் அவர்களில் சிலர் களைப்போடு இருக்கலாம் என கூறினார்.

அன்புமணியை பாராட்டது ஏன்?

சமீபத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் அன்புமணி பெயரை குறிப்பிட்டுப் பாராட்டவில்லை என்ற வருத்தம் தொண்டர்கள் மத்தியில் நிலவுவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த டாக்டர் ராமதாஸ், தாம் அன்புமணியை "செயல் தலைவர் அன்புமணி" என்று குறிப்பிட்டதாக விளக்கமளித்தார்.

ஊடகங்களின் பங்களிப்பு

கடந்த 45 ஆண்டுகளாக ஊடகங்களின் ஆதரவு தங்களுக்கு இருந்து வருவதாகவும், ஊடகங்கள் இல்லாத உலகமே இல்லை என்ற நிலை வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்திற்கு வந்து, இந்தப் பணிகளை வெளிப்படுத்தி, நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதற்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார்.