Ramadoss vs Anbumani: 'என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்’ பாமக தலைவர் ராமதாஸ் அறிவிப்பு!
இந்நிலையில், இன்று (12.4.2025) காலை முதல், "யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்" என ராமதாஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், தைலாபுர தோட்டத்திற்கு இன்று காலை முதல் கட்சி நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை.

என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என பாமக நிறுவனரும், தலைவருமான டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கி, தானே தலைவராகப் பொறுப்பேற்பதாக நேற்று அறிவித்தது கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நேற்றிரவு தனது மகள்களிடமும் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டதாக ஊடங்களில் செய்திகள் வெளியானது.
ராமதாஸை சந்தித்த ஜி.கே.மணி
இந்நிலையில், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனரும், தற்போதைய தலைவருமான டாக்டர் ராமதாஸை சந்திக்க அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வருகை தந்தார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்த அன்புமணியை நீக்கிவிட்டு, மீண்டும் தானே அந்தப் பொறுப்பை ஏற்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து, அன்புமணியின் ஆதரவாளர்கள் மத்தியிலும் குழப்பமும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.
சந்திக்க மறுக்கும் ராமதாஸ்
இந்த முடிவை அடுத்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளான கௌரவ தலைவர் ஜி.கே. மணி, வழக்கறிஞர் பாலு, திலகபாமா, பொருளாளர் உள்ளிட்டோர், கடந்த இரண்டு நாட்களாக தைலாபுரத்தில் உள்ள ராமதாஸின் தோட்டத்திற்கு சென்று அவரைச் சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், சிலரை மட்டுமே ராமதாஸ் சந்தித்ததாகவும், மற்றவர்களை சந்திக்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இன்று (12.4.2025) காலை முதல், "யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்" என ராமதாஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், தைலாபுர தோட்டத்திற்கு இன்று காலை முதல் கட்சி நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை. ராமதாஸின் இந்த உத்தரவை கட்சியினர் பின்பற்றுவார்களா என்பது தெளிவாகவில்லை. மேலும், ஜி.கே. மணி உள்ளிட்டோர் அன்புமணியை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ராமதாஸின் இந்த புதிய அறிவிப்பு கட்சிக்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமகவின் இந்த உட்கட்சி மாற்றங்கள் தமிழக அரசியலில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளன.
