தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Pm Modi's Visit Halts Devotees' Access To Swamy At Meenakshi Amman Temple, Madurai"

PM Modi: ’பிரதமர் மோடியின் மதுரை வருகை எதிரொலி!’ மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை!

Kathiravan V HT Tamil
Feb 27, 2024 02:22 PM IST

“மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடை வீதிகளில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் கோபுரங்களில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், மோப்ப நாய் உதவி உடன் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது”

பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப்படம்
பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப்படம் (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் மாதப்பூரில் நடக்கும் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.05 மணிக்கு கோவை மாவட்டம் சூலூர் விமான படை தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டன் மூலம் மாதப்பூருக்கு வரும் மோடி,  பொது கூட்ட மேடைக்கு  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன் இணைந்து காரில் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்கள். 

மதியம் 2.45 மணி முதல் 3.45 மணி வரை பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். பின்னர் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்கிறார். மாலை 5.10 மணிக்கு மதுரையில் தனியார் பள்ளியில் நடைபெறும் சிறு குறு தொழில் முனைவோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். பின்னர் 7 மணிக்கு தனியார் விடுதி ஒன்றில் தங்கும் பிரதமர் மோடி, இரவு 9.10 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் பள்ளியறை பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் மீண்டும் தங்கும் விடுதிக்கு செல்லும் பிரதமர் மோடி நாளை மதுரை விமான நிலையம் வழியாக திருநெல்வேலி செல்கிறார். 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதால், இன்று மாலை 4.30 மணி முதல் நாளை வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடை வீதிகளில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் கோபுரங்களில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், மோப்ப நாய் உதவி உடன் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. 

 

 

 

 

IPL_Entry_Point