தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Pm Modi: 'சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழகம்'.. பிரதமர் மோடி புகழாரம்!

PM Modi: 'சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழகம்'.. பிரதமர் மோடி புகழாரம்!

Karthikeyan S HT Tamil
Jan 19, 2024 08:33 PM IST

Khelo India Games: தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழியின் கலாச்சாரம் உங்களுக்கு உங்களின் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தரும் என்று கேலோ இந்தியா விளையாட்டு போட்டி துவக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் துவங்கின. இதன் துவக்க விழாவில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், 2024ம் ஆண்டு விளையாட்டு துறைக்கு சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழியின் கலாச்சாரம் உங்களுக்கு உங்களின் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தரும். வீரமங்கை வேலு நாச்சியார் மகளிர் சக்தியின் அடையாளம், தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக இருக்கிறேன். சென்னைக்கு வந்தது சொந்த ஊருக்கு வந்ததுபோல் இருக்கிறது.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.