Petrol Diesel Price: பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா?
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையிலேயே தொடர்கிறது. தொடர்ந்து விலை மாற்றம் இல்லாமல் 476-வது நாளாக அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்து வருவதால் மேற்கூறிய பொருள்களிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை பொருத்தவரை மாநிலங்களுக்கு மாநிலங்கள், மாவட்டங்களுக்கு மாவட்டங்கள் சிறிய அளவிலான மாற்றம் ஏற்படும்.
பெட்ரோல் இறக்குமதியை சார்ந்து தான் இந்தியா உள்ளது. இந்தியா, தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியை தான் உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போருக்கு முன்னால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலைக்கும் தற்போதைய விலைக்கு இடையே மாறுபாடு உள்ளது.
நமது நாடு தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையை OPEC (organisation of petroleum exporting countries) என்னும் அமெரிக்க ஆதரவு பெற்ற அரேபிய கூட்டமைப்பு மூலமும், ரஷ்யாவிலிருந்து பெரும்பாலும் நிறைவு செய்து கொள்கிறது.
பெட்ரோலுக்கு மாற்று என்ன?
பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டேதான் இருக்கப் போகிறது என்பது தெரிகிறது. இதற்கு மாற்றாக பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை பயன்படுத்தலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.
மின்சார வாகனங்களை வாங்குவோரை ஊக்குவிக்கும் நோக்கில் 100 சதவீத வரி விலக்கை தமிழக அரசு அளிக்க முன்வந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மோட்டார் வாகன வரிவிதிப்பு சட்டம், 1974 பிரிவு 20 மூலம் வழங்கப்பட்ட அதிகாரிகளைப் பயன்படுத்தி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு 2025-ம் ஆண்டு வரை 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும்.
2023 ஜனவரி 1ம் தேதி முதல் 2025 டிசம்பர் 31ம் தேதி வரை மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மோட்டார் வாகன வரிவிதிப்பு சட்டம், 1974 பிரிவு 20 மூலம் வழங்கப்பட்ட அதிகாரிகளைப் பயன்படுத்தி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு 2025-ம் ஆண்டு வரை 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும். 2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2025 டிசம்பர் 31-ஆம் தேதி வரை மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்