Petrol Diesel Price: ‘578வது நாளில் பெட்ரோல் விலையில் மாற்றமா?’ இதோ விவரம்!
“Petrol Diesel Price: பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதியை சார்ந்து தான் இந்தியா உள்ளது. இந்தியா, தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி செய்கிறது”

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று டிசம்பர் 20ஆம் தேதி 578 ஆவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை ஆகிறது.
பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதியை சார்ந்து தான் இந்தியா உள்ளது. இந்தியா, தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி செய்கிறது.
முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்து வருவதால் மேற்கூறிய பொருள்களிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை பொருத்தவரை மாநிலங்களுக்கு மாநிலங்கள், மாவட்டங்களுக்கு மாவட்டங்கள் சிறிய அளவிலான மாற்றம் ஏற்படும்.