'ரேஷன் கடையில் கருவிழி மூலமாக பொருள்கள் வாங்குவது கடினமாக இருந்தது.. சில பேருக்கு அது வேலை செய்யவில்லை’: புலம்பிய மக்கள்
பயோமெட்ரிக் மூலமாக நாங்கள் பொருட்களை ஈஸியாக வாங்கிடுவோம் என்றும்; இந்த கருவிழி முறை கஷ்டமாகத் தான் இருக்கு என்றும் ரேஷன் கடைகளில் அமலான புதிய முறையால் பொதுமக்கள் வேதனைத் தெரிவித்தனர்.

ரேஷன் கடையில் கருவிழி மூலமாக பொருள்கள் வாங்குவது மிகவும் கடினமாக இருந்தது என்றும், சில பேருக்கு அது வேலை செய்யவில்லை என்றும்; மீண்டும் பயோமெட்ரிக் முறையை கொண்டுவரவேண்டும் என நியாய விலைக்கடையில் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
நியாய விலைக்கடையில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், கருவிழி மூலம் மட்டுமே, இனி பதிவுசெய்யப்பட்டு, பொருட்கள் வழங்கப்படும் என நியாயவிலைக்கடையில் புதிய உத்தரவு வெளியானது. ஆனால், நடைமுறையில் இந்த உத்தரவைப் பின்பற்றுவதில் சிக்கல் இருந்தது.
இதுதொடர்பாக, மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவி கூறுகையில், ‘’ நாங்க ரேஷன் வாங்குவதற்காக கடைக்கு வந்திருந்தோம். ரேஷன் கடையில் பொருட்கள் எல்லாம் நாங்கள் பயோமெட்ரிக் முறையில் வாங்கி கொண்டு இருந்தோம். இன்றைக்கு ரொம்ப கூட்டமாக இருக்கு.