தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Pe Course Sportsperson Certificate Verification And Sundaranar University. Admission Details Same News

Alert Students : பிஇ-விளையாட்டு வீரர் சான்றிதழ் சரிபார்ப்பு, சுந்தரனார் பல்கலை. மாணவர் சேர்க்கை – விவரம் ஒரே செய்தியில்!

Priyadarshini R HT Tamil
May 27, 2023 08:41 AM IST

Alert Students : பொறியியல் மாணவர் சேர்க்கையில் விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஜூன் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் ஒரு தகவல் உள்ளே உள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

பொறியியல் சேர்க்கையில் விளையாட்டு வீரர் சிறப்பு ஒதுக்கீடுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஜூன் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில், முதல்கட்டமாக பங்கேற்கும் மாணவ, மாணவிகளின் பட்டியல்

www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கும் மாணவர்கள் அசல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும் என்று தொழி நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

சுந்தரனார் பல்கலை.யின் ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொ) அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது –

இப்பல்கலைக்கழகத் துறைகளில் 2023 – 24ம் கல்வியாண்டில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுநிலை பாடப்பிரிவுகளான வரலாறு, கணிதம், இயற்பியல், வேதியியல், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரம கல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தில் நடத்தப்படும் சுற்றுச்சூழல் அறிவியல் ராஜாக்கமங்கலம் சடல்சார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் நடத்தப்படும் கடல்சார் அறிவியல் மற்றும் இளநிலை படிப்புகளான B.Sc. Artificial Intelligence, Machine Learning, B.Sc. Cyber Security, B.Sc. Data Sciences பயில்வதற்கு ஒரு சில காலியிடங்கள் உள்ளன.

இந்தக் காலியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இம்மாதம் 31ம் தேதி பகல் 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.

முதல் கட்ட கலந்தாய்வில் தவிர்க்கமுடியாத காரணங்களால் கலந்துகொள்ள இயலாதவர்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.

இவ்வாறு கலந்துகொள்ள விரும்பும் மாணவர், மாணவிகள் தாங்கள் முன்பே விண்ணப்பித்த விண்ணப்பப் படிவ நகலை 30ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு முன்னர், office-uds@msuniv.ac.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பிவைப்பதன் மூலம் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று காலியாக உள்ள பாடப்பிரிவை விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம்.

இதுகுறித்த விவரங்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்தோ அல்லது 0462 – 2333741 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்