‘மாட்டிக்கினாரு ஒர்த்தரு.. இவர காப்பாத்தனும்..’ போக்சோ தலைமறைவு மதபோதகர் கைது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘மாட்டிக்கினாரு ஒர்த்தரு.. இவர காப்பாத்தனும்..’ போக்சோ தலைமறைவு மதபோதகர் கைது!

‘மாட்டிக்கினாரு ஒர்த்தரு.. இவர காப்பாத்தனும்..’ போக்சோ தலைமறைவு மதபோதகர் கைது!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 13, 2025 10:54 AM IST

ஆய்வாளர் அர்ஜீன் தலைமையிலான தனிப்படையினர் ஜான் ஜெபராஜை மூணாறு பகுதியில் பதுங்கி இருந்த போது நேற்று கைது செய்தனர். அவரை கோவை காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

‘மாட்டிக்கினாரு ஒர்த்தரு.. இவர காப்பாத்தனும்..’ போக்சோ தலைமறைவு மதபோதகர் கைது!
‘மாட்டிக்கினாரு ஒர்த்தரு.. இவர காப்பாத்தனும்..’ போக்சோ தலைமறைவு மதபோதகர் கைது!

தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ் (வயது 35). இவர் கோவை ஜி. என். மில்ஸ தற்போது வசித்து வருகிறார். மேலும் கோவையில் மத போதகராகவும் கிறிஸ்தவ பாடல்களை பாடி பிரசங்கம் செய்து பிரபலமாகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வருடம் மே மாதம் 21 ஆம் தேதி அவரது வீட்டில் நடந்த கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக ஜான் ஜெபராஜ் மீது அந்த சிறுமிகள் காந்திபுரம் மத்திய மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் போலீசார் ஜான் ஜெபராஜ் மீது போஸ்கோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கு இடையே பாதிரியார் ஜான் ஜெபராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் 3 பணிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படை போலீசார் ஜான் ஜெபராஜ் நெல்லை, தென்காசி, கன்னியாகும, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தேடி வந்தனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க இருக்க விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டிஸ் வழங்கப்பட்டது. இதற்கு இடையே ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார். அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆய்வாளர் அர்ஜீன் தலைமையிலான தனிப்படையினர் ஜான் ஜெபராஜை மூணாறு பகுதியில் பதுங்கி இருந்த போது நேற்று கைது செய்தனர். அவரை கோவை காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். பின்னர், போக்சோ நீதிமன்றத்திற்கு உதவி ஆணையர் கணேஷ் தலைமையில் பலத்த பாதுகாப்போடு அழைத்து வந்தனர்.

இந்த சம்பவம் போல, வேறு ஏதாவது சம்பவங்களில் இவர் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்த உள்ளனர்.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.