TN Assembly: ’புறக்கணித்த ஆளுநர் உரை பதிவு செய்யப்படும்!’ பேரவையில் அதிரடி தீர்மானம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Assembly: ’புறக்கணித்த ஆளுநர் உரை பதிவு செய்யப்படும்!’ பேரவையில் அதிரடி தீர்மானம்!

TN Assembly: ’புறக்கணித்த ஆளுநர் உரை பதிவு செய்யப்படும்!’ பேரவையில் அதிரடி தீர்மானம்!

Kathiravan V HT Tamil
Feb 12, 2024 11:05 AM IST

“TN Assembly: இந்த பேரவை எப்போதும் மரபுகளை பின்பற்றி வருகிறது. மாண்புமிகு ஆளுநர் உரை தொடக்கத்திற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்தும், நாட்டுப்பண்ணும் இசைக்கப்பட்டு வருகிறது என சபாநாயகர் அப்பாவு விளக்கம்”

ஆளுநர் வாசிக்காத உரையை பதிவு செய்யக்கோரி துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்
ஆளுநர் வாசிக்காத உரையை பதிவு செய்யக்கோரி துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்

இந்த புத்தாண்டு கூடுதல் மகிழ்ச்சியையும், நல்வரவையும் கொண்டு வரட்டும் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, “பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து” என்ற குரலை வாசித்தார். தொடர்ந்து பேசுகையில், என்னுடைய தொடர் கோரிக்கை, அறிவுரை என்னவென்றால் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும்.

நிகழ்ச்சி தொடங்கும்போதும் முடியும்போதும் தேசிய கீதம் இசைப்பது புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறிய ஆளுநர், தமிழ்நாடு அரசின் உரையில் பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும் உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்க முடியாது என்ற அவர் வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் நன்றி! என்று கூறி தமது உரையை முடித்துக் கொண்டார். இதனை தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழ் பதிப்பை சபாநாயகர் அப்பாவு பேரவையில் வாசித்தார்.

பின்னர், 2024ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆளுநர் உரை இந்த மன்றத்திற்கு வழங்கப்பட்டபடியே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன் என அவை முன்னர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

பின்னர் பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நாட்டுப்பண் இசைத்தல் குறித்து ஆளுநர் எழுதிய கடிதம் கடந்த ஆண்டே தீர்க்கப்பட்டுவிட்டது. இந்த பேரவை எப்போதும் மரபுகளை பின்பற்றி வருகிறது. மாண்புமிகு ஆளுநர் உரை தொடக்கத்திற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்தும், நாட்டுப்பண்ணும் இசைக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.