பரங்கிமலை மாணவி கொலை வழக்கு! குற்றவாளி சதீஷுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!
2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்தியபிரியாவை, சதீஷ் என்பவர் தள்ளிவிட்டார். கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில்நிலையத்தில் சத்ய பிரியா காத்து இருந்த போது இந்த சம்பவம் நடந்தது.
சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் சதீஷ் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்தியபிரியாவை, சதீஷ் என்பவர் தள்ளிவிட்டார். கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில்நிலையத்தில் சத்ய பிரியா காத்து இருந்த போது இந்த சம்பவம் நடந்தது.
தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த வழக்கை சிபிசிஐடி விசராணை செய்த நிலையில், அல்லிக்குளம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 70 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அன்று சதீஷ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாணவி கொலை வழக்கில் சதீஷுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவியை சித்ரவதை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் 3ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கபப்ட்டு உள்ளதால் தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.