Parandur Airport : விஜய் மட்டுமில்லை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.. பரந்தூர் விமான நிலையம் அவசியம் -தங்கம் தென்னரசு!
Parandur Airport : அடுத்த 10 வருடத்திற்கு சென்றால் ஏறத்தாழ 8 கோடி பயணிகள் வருவார்கள் என மதிப்பிட படுகிறது. இவ்வளவு பெரிய எஸ்டிமேட் இருக்கும் பொழுது சென்னையில் இருக்கக்கூடிய விமான நிலையத்தின் பரப்பளவு 1,300 ஏக்கர் தான் இருக்கிறது.

Parandur Airport : ''பரந்தூர் விமான நிலையம் மிக அவசியமான ஒன்று என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விஜய் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினரை சந்திப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு
அரசியல் கட்சி தலைவர்கள் யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களை சந்திக்கலாம் என நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மேலும் விமான நிலையத்தை உருவாக்குவது என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகுந்த அவசியமான ஒன்று என்பதை நாம் யாரும் மறுத்து விட முடியாது. ஏன் பரந்தூர் விமான நிலையம் அவசியமாக இருக்கிறது என்றால் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு நகரங்கள் டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் என எதை எடுத்துக் கொண்டாலும் நம்முடைய இப்போது இருக்கக்கூடிய சென்னை விமான நிலையம், உள்நாட்டு விமான நிலையமாக இருந்தாலும் சரி, பன்னாட்டு விமான நிலையமாக இருந்தாலும் மிகச் சிறிய விமான நிலையமாக இருக்கிறது.
3.5 கோடியாக உயரும் பயணிகள் எண்ணிக்கை
டெல்லியினுடைய அளவை எடுத்துக் கொண்டால் ஏறத்தாழ 51 ஆயிரம் ஏக்கர், மும்பை விமான நிலையம் 1,850 ஏக்கர். ஹைதராபாத்தில் கிரீன் பீல்டு விமானநிலையம் 5,500 ஏக்கர், பெங்களூரில், 4,008 ஏக்கர் கொண்டது. ஆனால் சென்னை விமான நிலையத்தின் பரப்பளவு மொத்தமாகவே 1,300 ஏக்கர் தான் இருக்கிறது. அளவில் சிறிதாக இருந்தாலும் இந்த விமான நிலையத்திற்கு ஒரு வருடத்திற்கு 2 கோடி பேர் வந்து போகிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக 60 ஆயிரம் பயணிகள் இப்போது வருகிறார்கள். இன்று இந்த சூழ்நிலை என்றால் இன்னும் ஒரு ஏழு வருடம் கடந்து பார்த்தீர்கள் என்றால் இன்றைக்கு 2.2 கோடி பயணிகள் எண்ணிக்கை என்பது 3.5 கோடியாக ஒரு வருடத்திற்கு அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.
அடுத்த 10 வருடத்திற்கு சென்றால் ஏறத்தாழ 8 கோடி பயணிகள் வருவார்கள் என மதிப்பிட படுகிறது. இவ்வளவு பெரிய எஸ்டிமேட் இருக்கும் பொழுது சென்னையில் இருக்கக்கூடிய விமான நிலையத்தின் பரப்பளவு 1,300 ஏக்கர் தான் இருக்கிறது. எவ்வளவு தான் விரிவு படுத்தினாலும் பயணிகளுடைய எண்ணிக்கையை சமாளிக்க முடியாது. சென்னை விமான நிலையத்தை சுற்றி பல்வேறு வீடுகள், நகர்ப்புறங்கள் உருவாகி இருக்கிறது. அவற்றையெல்லாம் எதுவும் செய்ய முடியாது. அதற்குள் உள்ள நிலப்பரப்பில் தான் நாம் விரிவு படுத்த முடியும். குடியிருப்பு பகுதியை நாம் எதுவும் செய்ய முடியாது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைத்திருக்கிறோம்'' என்றார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கிளாம்பாக்கத்தில் ஒரு புதிய பேருந்து நிலையத்தை நாம் அமைத்திருக்கிறோம். அதே போல் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கக்கூடிய இடங்களில் கல்கத்தா போன்ற இடங்கள் முன்னணியில் இருந்தாலும் கூட நம்மை பொருத்தவரை 31 வது இடத்தில் தான் இருக்கிறோம். அது நமக்கு சிறு ஆறுதலாக இருந்தாலும் கூட எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக வரும். அதனால் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது கழக ஆட்சியில் மிக முக்கியமான நோக்கமாக இருக்கிறது.
பரந்தூர் விமான நிலையம் அவசியம்
ஒரு நாட்டின் மாநிலத்தினுடைய உள்கட்டமைப்பு பெரியதாக இருக்கும் போது தான் அது பொருளாதாரமாக இருந்தாலும், சுற்றுலாவாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் அபிவிருத்தியை கொண்டு வரும். உள்கட்டமைப்புக்கும், வளர்ச்சிக்குமான ஒரு பிணைப்பை நாங்கள் நன்றாக உணர்ந்திருக்க கூடிய காரணத்தினால் தான் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை எல்லாம் செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறோம்.
பரந்தூர் விமான நிலையம் என்பது தொழில் புரட்சிக்கு அடிப்படையாக வரக்கூடிய காலங்களில் அமையும் இது பயணிகளின் போக்குவரத்து அடர்த்தியை பொருத்து மட்டும் இல்லாமல் தொழில் வர்த்தகம் போன்ற கட்டமைப்புகள் வளர்ச்சியை முடிவு செய்ய இந்த விமான நிலையம் அவசியம் என்கின்றார்.

தொடர்புடையை செய்திகள்