ADMK: ’அந்த நாயை வீட்டில் வைத்துக் கொண்டிருக்க முடியுமா?’ ஈபிஸ் குறித்த கேள்விக்கு பண்ரூட்டி ராமச்சந்திரன் பதில்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk: ’அந்த நாயை வீட்டில் வைத்துக் கொண்டிருக்க முடியுமா?’ ஈபிஸ் குறித்த கேள்விக்கு பண்ரூட்டி ராமச்சந்திரன் பதில்!

ADMK: ’அந்த நாயை வீட்டில் வைத்துக் கொண்டிருக்க முடியுமா?’ ஈபிஸ் குறித்த கேள்விக்கு பண்ரூட்டி ராமச்சந்திரன் பதில்!

Kathiravan V HT Tamil
Sep 28, 2023 08:22 PM IST

”இதுதான் ஈபிஎஸ்க்கு பிரச்னை. இதனால்தான் ‘அப்போ நா மாப்பள இல்லையா’ என கேட்டு ஈபிஎஸ் விழித்துக் கொண்டர்”

ஓபிஎஸ்- பண்ரூட்டி ராமச்சந்திரன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு
ஓபிஎஸ்- பண்ரூட்டி ராமச்சந்திரன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு

இதில் பேசிய பண்ரூட்டி ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். மேலும் மக்களோடும் கழகத் தொண்டர்களோடும் தொடர்பு கொள்ளும் வகையில் புரட்சி பயணத்தை எங்கு எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விவாதித்தோம். அதிமுக தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்துவது குறித்தும் முடிவெடுத்துள்ளோம்.

பழனிசாமி அவர்களை நம்பமுடியாது என்பதை மீண்டும் அவர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே வெளிப்படுத்தி உள்ளார்கள். அரசியலில் நம்பகத்தன்மை என்பது அடிப்படை பண்பு. அந்த நம்பிக்கைக்கு உரியவர் எனது அருமை நண்பர் ஓபிஎஸ் அவர்கள். இது நிரூபிக்கப்பட்டது என்றார்.

கேள்வி:- பாஜக உடன் கூட்டணியில் உள்ளீர்களா இல்லையா?

அதை நீங்கள் பாஜகவிடம் கேட்க வேண்டும்.

கேள்வி:- நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு யாருக்கு?

அது குறித்து தேர்தல் வரும்போது தீர்மானிப்போம். பாஜக என்ன செய்யப்போகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது.

கேள்வி:- அண்ணா, அம்மா குறித்து அண்ணாமலை பேசியதற்கானத்தானே ஈபிஎஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்துள்ளார்?

அறிஞர் அண்ணா அவர்கள் 1956இல் மதுரையில் பி.டி.ராஜன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எங்களுக்கு தெரியும். அண்ணா பகுத்தறிவு கருத்துக்களை பேசினார். மறுநாள் பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் ஆன்மீக கருத்தை வலியுறுத்தி பேசினார்.

அண்ணாமலை பேசிய தகவல்கள் தவறானவை

அதற்கு அடுத்த நாள் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணா அவர்கள் முத்து ராமலிங்கத் தேவரை பற்றி தாக்கி பேசுவார் என்றார்கள். ஆனால் அறிஞர் அண்ணாவின் ஒரு மணி நேரப்பேச்சில் ஒரு சொல் கூட தேவரை பற்றி பேசவில்லை. 

ஏனென்றால் பகையை வளர்ப்பதை அறிஞர் அண்ணா அவர்கள் விரும்பியதே கிடையாது. இதுதான் நடந்தது. மறைந்த தலைவர்களை பற்றி பேசும்போது சரியான தகவல்களை எடுத்து சொல்ல வேண்டும். அண்ணாமாலை சொன்ன தகவல்கள் தவறானவை. ஆனால் அவற்றை உள்நோக்கத்தோடு பேசினார் என்று நான் சொல்லவில்லை.

”அந்த நாயை வைத்துக் கொண்டிருக்க முடியுமா?”

இவர்கள் அறிஞர் அண்ணா அவர்களை பற்றி பேசிய பிறகு நான்கு நாட்கள் கழித்து இவர்கள் இந்த பிரச்னையை கிளப்புகிறார்கள். திருடுபோய் நான்கு நாட்கள் கழித்து வீட்டு நாய் குலைக்கிறது என்றால் அந்த நாயை வைத்துக் கொண்டிருக்க முடியுமா?. 

’அப்போ நா மாப்பள இல்லையா’

அறிஞர் அண்ணா அவர்களை பற்றி பேசிய பிறகு பாஜக தலைவர் அண்ணாமலை “2026 தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வரும், நாங்கள் பி டீம் அல்ல சி டீம் அல்ல” என்று கூறி இருந்தார். 

இதுதான் ஈபிஎஸ்க்கு பிரச்னை. இதனால்தான் ‘அப்போ நா மாப்பள இல்லையா’ என கேட்டு ஈபிஎஸ் விழித்துக் கொண்டார். தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டு தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் நோக்கம்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.