தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Order To Pay Rs.1,00,000 Into Government Hospital Bank Account

குட்கா வழக்கு: அரசு மருத்துவமனை வங்கி கணக்கில் ரூ.1,00,000 செலுத்த உத்தரவு

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 31, 2023 02:08 PM IST

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டவரை அரசு மருத்துவமனை வங்கி கணக்கில் 100000 செலுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

 உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம்
உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம்

ட்ரெண்டிங் செய்திகள்

தடை செய்யப்பட்ட குட்கா பொருள் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட அம்பரேஷ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் ரூ.1,00,000 செலுத்த உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ரூ.3,90,000 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதியன்று அம்பரேஷ் என்பர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பரேஷ் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ரூ.3,90,000 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள் வைத்திருந்த போது மனுதாரர் கைது செய்யப்பட்டுள்ளார் இவருடன் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அம்பரேஷ்க்கு ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, மனுதாரர் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் ரூ.1,00,000 செலுத்த வேண்டும். மேலும்

மறு உத்தரவு வரும் வரை மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என உத்தரவிட்டார்.

மனுதாரர் தலைமறைவாகவோ வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்களை கலைக்கவும் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதற்கிடையில் குட்கா தடை மீதான தனி தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்படும். வியாபாரிகள் குட்காவை விற்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்