தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Rains: ‘மிதக்குது சென்னை’ - 4 மாவட்டங்களுக்கு ஆரெஞ்ச் அலெர்ட்!

Chennai Rains: ‘மிதக்குது சென்னை’ - 4 மாவட்டங்களுக்கு ஆரெஞ்ச் அலெர்ட்!

Marimuthu M HT Tamil
Nov 30, 2023 04:33 PM IST

நான்கு மாவட்டங்களுக்கு மழை பற்றிய ஆரெஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களுக்கு ஆரெஞ்ச் அலெர்ட்
4 மாவட்டங்களுக்கு ஆரெஞ்ச் அலெர்ட்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து வானிலை ஆர்வலர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ''ஆரஞ்சு அலெர்ட் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருக்கும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கி வருகையில், திருவள்ளூர் மாவட்டம் முதல் நாகை மாவட்டம் வரையிலான கடற்கரையோர மாவட்டங்களில் மழைபெய்யும். இந்தப் புயல் வரும் 3ஆம் தேதி கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயல் சென்னைக்கு வடக்கே, ஆந்திர மாநிலத்தின் தெற்கே கரையைக் கடக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயல் கரையைக் கடப்பதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய உள்மாவட்டங்களிலும் டிசம்பர் 2,3,4 ஆகிய தேதிகளில் மழைபெய்யவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது’’ என்றார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரெஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சென்னையின் தியாகராயநகர், கொளத்தூர் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் நேற்று பெய்த மழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024