‘எங்க அப்பத்தா சொல்லுச்சு.. திமுகவுக்கு புகழாரம்..’ ஓபிஎஸ் பேச்சுக்கு மேஜையை தட்டி திமுகவினர் வரவேற்பு!
அதுமட்டுமல்லாமல் மூன்று கலைக் கல்லூரிகளை முன்னாள் முதல்வர் கலைஞர் தான், பின்தங்கிய சமுதாய் மக்களுக்காக ஏற்பாடு செய்து தந்தார் என்பதையும் தெரிவிக்கிறேன்.

இன்றைய சட்டமன்றத்தில், மறைந்த பி.கே.மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அது தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தன்னுடைய கருத்தில், திமுகவுக்கும், திமுக தலைவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இது அதிமுகவினரிடம் கோபத்தை ஏற்படுத்தியது. அது தொடர்பாக ஓபிஎஸ் பேசியது இதோ:
நானும் அவரும் பெரியகுளத்தில் ஜெயித்தோம்
‘‘பேரவை தலைவர் அவர்களே, முதலமைச்சர் அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை, இன்று வெளியிட்டிருக்கிறார்கள். 1952 ல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அவர் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு, கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றார் என்பதை நினைவு கூறுகிறேன். நானும் என் அரசியல் வாழ்க்கையில் பெரியகுளத்தில் சட்டமன்ற உறுப்பினராக தான் தேர்வு செய்யப்பட்டேன் என்பதை நன்றியோடு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
