தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Ops Congratulated His Team Of Lawyers

OPS : வழக்கறிஞர்கள் குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்

Divya Sekar HT Tamil
Aug 17, 2022 02:34 PM IST

தனது வழக்கறிஞர்கள் குழுவினரை நேரில் சந்தித்து ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர்கள் குழுவினரை நேரில் சந்தித்த ஓபிஎஸ்
வழக்கறிஞர்கள் குழுவினரை நேரில் சந்தித்த ஓபிஎஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். அத்துடன் பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

இதையடுத்து மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். மேலும், தனது வழக்கறிஞர்கள் குழுவினரை நேரில் சந்தித்து ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்