யார் அரைவேக்காடு? வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. இபிஎஸ் கடும் சாடல்!
வாய்க்கு வந்த ரீல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளந்துவிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியிருக்கிறார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "யார் அரைவேக்காடு திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் திரு. ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல. "அரைவேக்காட்டுத் தனமாக" இருக்கிறதாம் அவருக்கு. அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா ஸ்டாலின் அவர்களே?
ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே- அது தான் அரைவேக்காட்டுத்தனம்!