Savukku Shankar : ஆன்லைன் மோசடி வழக்கு.. சவுக்கு சங்கரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு!
Savukku Shankar: சவுக்கு சங்கரிடம் விசரணை நடத்த 9 நாட்கள் காவல் துறை கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமார் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

ஆன்லைன் மோசடி வழக்கு தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமார் சவுக்கு சங்கரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
ஆன்லைன் மூலம் வருமானம்
சென்னையை சேர்ந்த விக்னேஷ் இவர் யூடியூபர் சவுக்கு சங்கரின் சவுக்கு மீடியா யூடியூப் சேனலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், கரூரில் பிரியாணிக்கடை நடத்தி வரும் கிருஷ்ணன் என்பவருக்கும் ஆன்லைன் விளம்பரம் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்ட இருவரும் பேசி உள்ளனர்.இந்த நிலையில், கடந்த 15.10.23 ம் தேதி ஈரோடு சென்ற விக்னேஷ், கரூரில் உள்ள கிருஷ்ணனுக்கு தொடர்பு கொண்டு, தான் ஈரோட்டில் இருப்பதாகவும், 16.10.23 தேதி கரூர் வருவதாகம் ஆன்லைன் வர்த்தகத்திற்கு ரூ 7 லட்சம் ரெடியாக வைக்குமாறு கூறியுள்ளார்.