One Nation One Election: ‘ஒவ்வொரு மாதமும் தேர்தல் வர வேண்டும் என ஆம் ஆத்மி நினைக்கிறது’ அரவிந்த் கெஜ்ரிவால்!
“தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் சந்திரனைக் கூட தருவதாக வாக்குறுதி அளிப்பார்கள்.”
மத்தியப்பிரதேச மாநிலம் ரோவாவில் நடந்த கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டிற்குத் தேவையானது 'ஒரு தேசம், ஒரே கல்வி (அனைவருக்கும் சமமான கல்வி) மற்றும் 'ஒரு தேசம், ஒரே சிகிச்சை' (பணக்காரனோ ஏழையோ, அனைவருக்கும் சமமான சிகிச்சை) ஆகும்.
“ஒரு நாடு, ஒரே தேர்தல்” முறையை நாட்டில் அமல்படுத்த பாஜகவினரை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள், ஏனெனில் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் சந்திரனைக் கூட தருவதாக வாக்குறுதி அளிப்பார்கள். தேர்தலின் போது அரசியல்வாதிகள் உங்களுடன் மிகவும் இனிமையாகப் பேசுவார்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற இந்த கருத்து நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசியல்வாதிகள் லண்டன், பாரிஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் நான்கரை ஆண்டுகள் சுற்றித் திரிவார்கள்,தில்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, ஒவ்வொரு மாதமும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்கிறது.
டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசாங்கங்கள் செய்ததைப் போலவே, மத்திய பிரதேச மக்களுக்கு இலவச மற்றும் 24 மணி நேர மின்சாரம் கிடைக்கும். அனைத்து அரசு பள்ளிகளையும் நவீன கல்வி மையங்களாக மாற்றுவோம். அரசு மருத்துவமனைகளில் 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை செலவில் நோயாளிகளுக்கு தரமான இலவச சிகிச்சை, மருந்துகள், நோயறிதல் பரிசோதனைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளை டெல்லி போன்று நவீனமயமாக்கி வழங்குவதாக கெஜ்ரிவால் உறுதியளித்தார்.