தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  On The Occasion Of Diwali, Omnibus Fares In Tamil Nadu Will Be Reduced By 5% - Minister S.s. Sivashankar

Diwali: ஆம்னி பஸ் கட்டணம் 5% குறைப்பு! உங்க ஊருக்கு எவ்வுளோ தெரியுமா? விவரம் இதோ!

Kathiravan V HT Tamil
Oct 28, 2023 05:32 PM IST

”கடந்த ஆண்டு 25 சதவீதம் குறைத்த நிலையில் இந்த ஆண்டு 5 சதவீத கட்டணங்களை குறைக்கவும் ஒப்புதல்”

ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகள்

ட்ரெண்டிங் செய்திகள்

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் ஆம்னி பேருந்துகள் கட்டண நிர்ணயம் குறித்து சென்னை எழிலகத்தில் போக்குவரத்து துறை ஆணையர் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் உடன் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ் கட்டணத்தை 5 சதவீதம் வரை குறைக்க ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டு உள்ளனர். கடந்த ஆண்டு 25 சதவீதம் குறைத்த நிலையில் இந்த ஆண்டு 5 சதவீத கட்டணங்களை குறைக்கவும் ஒப்புக் கொண்டுள்ளனர். கடந்த தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வு இல்லாமல் இயக்கப்பட்டதை போல் இந்த ஆண்டும் இயக்க உள்ளனர் என கூறினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு இல்லாமல் இருக்கும் சூழலில் பொதுமக்கள் நலன் கருதி இதனை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை அம்னி பேருந்துகள் உரிமையாளர்களிடம் வைத்த நிலையில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆம்னி பேருந்து கட்டணம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. இதன்படி

  • சென்னை - கோவை - குறைந்தபட்சம் ரூ.1724 - அதிகபட்சம் ரூ.2874
  • சென்னை - திருச்சி - குறைந்தபட்சம் ரூ.1066 - அதிகபட்சம் ரூ.1777
  • சென்னை - நெல்லை - குறைந்தபட்சம் ரூ.1959 - அதிகபட்சம் ரூ.3266
  • சென்னை - மதுரை - குறைந்தபட்சம் ரூ.1505 - அதிகபட்சம் ரூ.2508
  • சென்னை -சேலம் - குறைந்தபட்சம் ரூ.1363 - அதிகபட்சம் ரூ.1895
  • சென்னை - நாகர்கோயில் - குறைந்தபட்சம் ரூ.2211 - அதிகபட்சம் ரூ.3765 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

WhatsApp channel