OPS: செல்லாது! செல்லாது! அவரு ஜெய்ச்சது செல்லாது! நவாஸ்கனி வெற்றிக்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ops: செல்லாது! செல்லாது! அவரு ஜெய்ச்சது செல்லாது! நவாஸ்கனி வெற்றிக்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு!

OPS: செல்லாது! செல்லாது! அவரு ஜெய்ச்சது செல்லாது! நவாஸ்கனி வெற்றிக்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு!

Kathiravan V HT Tamil
Jul 18, 2024 04:42 PM IST

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஓ.பன்னீர் செல்வம், திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஐ.யு.எம்.எல் வேட்பாளர் நவாஸ் கனியிடம் தோல்வி அடைந்தார்.

OPS: செல்லாது! செல்லாது! அவரு ஜெய்ச்சது செல்லாது! நவாஸ்கனி வெற்றிக்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு!
OPS: செல்லாது! செல்லாது! அவரு ஜெய்ச்சது செல்லாது! நவாஸ்கனி வெற்றிக்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு!

சுயேச்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை நடத்தி வரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் பலா பழம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார். ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் ஏராளமான வேட்பாளர்களும் சுயேச்சையாக போட்டியிட்டனர். 

வெற்றி பெற்ற நவாஸ் கனி 

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி 5 லட்சத்து 9ஆயிரத்து 664 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 

இரண்டாம் இடத்தை பிடித்த ஓபிஎஸ்

3 லட்சத்து 42 ஆயிரத்து 882 வாக்குகளை பெற்ற ஓ.பன்னீர் செல்வம் இரண்டாம் இடம் பிடித்தார். 

99 ஆயிரத்து 780 வாக்குகளை பெற்ற அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். 

97 ஆயிரத்து 672 வாக்குகளை பெற்ற டாக்டர் சந்திர பிரபா நான்காம் இடத்தை பிடித்து இருந்தார். 

இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். 

செய்தியாளர் சந்திப்பு 

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், தமிழ்நாடு முழுவதும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் கட்சி இணைய வேண்டும் என சொல்லிக் கொண்டு இருக்கின்றோம். நாங்களெல்லாம் புரட்சித் தலைவர் காலத்தில் இருந்து, அம்மா காலம் வரை இருந்தவர்கள்.  

இந்த இயக்கம் ஜனநாயக முறைப்படி தொண்டர்களுக்கான இயக்கமாக இருக்க வேண்டும். இந்த இயக்கம் பிளவுப்பட்டு இருப்பது தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகளுக்கு எதிரானது என கூறினார். 

3 பேரை தவிர யாரை வேண்டுமானாலும் அதிமுகவில் இணைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எடப்பாடி பழனிசாமியிடம் போய், எங்களை கட்சியில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று யார் சொன்னது, அவராகவே கேள்விகேட்டு, அவரே பதில் சொல்வது நல்லது அல்ல என கூறினார். 

சசிகலாவில் சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு, என்னை பொறுத்தவரை அனைத்து தரப்பட்ட தலைவர்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். மாண்புமிகு சின்னம்மாவின் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் என தெரிவித்தார்.  

காவிரி நதிநீர் பிரச்னை குறித்த கேள்விக்கு, காவிரியின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க காவிரி நடுவர் மன்றம் நிறுவப்பட்டது. 18 ஆண்டுகால வழக்கை விசாரித்து நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கி உள்ளது. இதற்கு அரசாணை பெற்று சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அம்மா அவர்கள் பெற்றுக் கொண்டுத்து உள்ளார்கள். காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு பெற்றுத் தந்த தலைவர் அம்மா அவர்கள். அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்தியா கூட்டணியில்தான் திமுக உள்ளதால், முதலமைச்சர் தனது செல்வாக்கை பயன்படுத்தி மாதாந்திர அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற்றுத் தர வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.