Seeman : ‘3000 பேர் இணைவார்கள் என்பது நேற்றே எப்படி தெரிந்தது?’ கோவையில் சீமான் கேள்வி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Seeman : ‘3000 பேர் இணைவார்கள் என்பது நேற்றே எப்படி தெரிந்தது?’ கோவையில் சீமான் கேள்வி!

Seeman : ‘3000 பேர் இணைவார்கள் என்பது நேற்றே எப்படி தெரிந்தது?’ கோவையில் சீமான் கேள்வி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 24, 2025 12:33 PM IST

‘பெரியார் ஒழிக என்பது என் கோட்பாடு அல்ல, பிரபாகரன் வாழ்க என்பது தான் என் கோட்பாடு. தீவிரவாதி என்று சொல்லும் பிரபாகரனை பற்றி பேசி 30 லட்சம் வாக்குகளை வாங்கி மூன்று சக்தியாக வந்துள்ளேன்’

Seeman : ‘3000 பேர் இணைவார்கள் என்பது நேற்றே  எப்படி தெரிந்தது?’ கோவையில் சீமான் கேள்வி!
Seeman : ‘3000 பேர் இணைவார்கள் என்பது நேற்றே எப்படி தெரிந்தது?’ கோவையில் சீமான் கேள்வி! (PTI)

‘‘திமுகவில் 3000 பேர் இணைவார்கள் என்று, நேற்றே எப்படி தெரிந்தது? சேர்ந்த பிறகு தானே எண்ணிக்கை தெரியும். இன்று சேரப் போகும் நபர்கள் பற்றி, நேற்றே எப்படி தெரிந்தது? நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். திமுகவையும் சேர்த்து நாங்கள் தான் வளர்கிறோம். பெரியாரை விமர்சித்து அண்ணா, கருணாநிதி பேசி உள்ளார்கள். திகவில் இருந்து திமுக பிரிய காரணம் என்ன? பெரியாரை‌ எதிர்த்து அண்ணா பேசினார். பெரியாரை விமர்சித்து கருணாநிதி பேசியதில் ஒரு துளி கூட நான் பேசவில்லை.

பிரபாகரனை நான் சந்திக்கவே இல்லை

நான் பிரபாகரனின் ரத்த உறவு அல்ல, லட்சிய உறவு. அவரது லட்சியத்திற்காக நாங்கள் தான் நிற்கிறோம். பிரபாகரனின் அண்ணன் மகனுக்கு, உலகம் முழுவதும் உள்ள என் சொந்தங்கள் பதில் சொல்வார்கள். பிரபாகரன் உடன் நான் சந்தித்ததை வைத்து பலரும், பலவித தகவல்களை கூறுகின்றனர். நான் பிரபாகரனை சந்திக்கவில்லை. ஒருவர் 8 நிமிடம் தான் சந்தித்ததாக கூறுகிறார்.‌ ஒருவர் போட்டோ எடிட் செய்ததாக கூறுகிறார். நான் பிரபாகரனை சந்திக்கவில்லை என கூறுகிறேன்.

பாஜக ஏ டீம் திமுக, நான் பி டீம். பிரபாகரன் உடன் எடுத்த போட்டோ உண்மை என நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த போட்டோவில் இருப்பது நானே இல்லை. நானே பெரிய பவுன்சர் தான். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்வார்கள் என எனக்கு தெரியும். இது மக்கள் தன்னெழுச்சியாக எழுந்து போராடியதற்கு கிடைத்த வெற்றி. இதனை வேறு யாரும் சொந்த கொண்டாட முடியாது.

பெரியார் ஒழிக என்பது என் கோட்பாடு அல்ல

ஈரோடு தேர்தலில் நல்ல ஆண்மகனாக இருந்தால் சீமானுக்கு ஓட்டு போட வேண்டாம் என சொல்ல வேண்டும். பெரியார் திராவிடத்தின் குறியீடு, பிரபாகரன் தமிழின் அடையாளம். பெரியார் ஒழிக என்பது என் கோட்பாடு அல்ல, பிரபாகரன் வாழ்க என்பது தான் என் கோட்பாடு. தீவிரவாதி என்று சொல்லும் பிரபாகரனை பற்றி பேசி 30 லட்சம் வாக்குகளை வாங்கி மூன்று சக்தியாக வந்துள்ளேன். சூரியன் உதித்தால் தான் விடிவு வரும். ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் தமிழகத்திற்கு விடிவு வரும்,’’

என்று அந்த செய்தியாளர் சந்திப்பில் சீமான் பேசியுள்ளார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.