தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  North Indians Attacked School Boy And Took Money From Shop

Madurai Theft: கடையில் தனியாக இருந்த சிறுவன்.. பட்டப்பகலில் தாக்கி பலே கைவரிசை காட்டிய வடமாநில இளைஞர்கள்!

Aarthi Balaji HT Tamil
Mar 10, 2024 02:03 PM IST

Madurai Crime: மதுரை மாவட்ட பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் மாட்டுத்தீவன கடையில் இருந்த சிறுவனை தாக்கி பணத்தை திருடி சென்ற வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிறுவனை தாக்கி கல்லாவில் கைவரிசை
சிறுவனை தாக்கி கல்லாவில் கைவரிசை

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர்,  கிருஷ்ணன். இவர் அதே பகுதியில் உள்ள மாட்டு தீவன கடையை சுமார் மூன்று ஆண்டு காலமாக நடத்தி வருகிறார். 

மாட்டு தீவன கடை வியாபாரி

இதனிடையே கிருஷ்ணனுக்கு திருமணமாகி செல்வ பிரகாஷ் ( வயது 15 ) என்ற மகன் இருக்கிறார். இன்று ஞாயிற்றுகிழமை பள்ளி விடுமுறை என்பதால் செல்வ பிரகாஷ் தனது தந்தையுடன் கடையில் இருந்து உள்ளார்.

அப்போது கிருஷ்ணன் தனது மகன் செல்வ பிரகாஷிடம் கடையை பார்த்துக் கொள் தான் சென்று கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு கிருஷ்ணன் சென்றுவிட்டார். 

அவர் வழக்கம் போல் தான் சென்றார். ஆனால் இதை வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மர்ம நபர்கள் நோட்டமிட்டு கொண்டு இருந்தார்கள். 

சிறுவனிடம் கைவரிசை 

கிருஷ்ணன் கடையை விட்டு நகர்ந்து சென்றதும், வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மர்ம நபர்கள் கடைக்குள் தனியாக இருந்த சிறுவனிடம் தீவனம் வாங்குவது போல் கடைக்கு சென்றனர். 

யாரும் இல்லாத நேரமாக பார்த்து நாடகமாடி சிறுவனை அடித்து கீழே தள்ளிவிட்டு கல்லாப் பெட்டியில் இருந்த நாலாயிரத்து ஐநூறு ரூபாய் பணத்தை திருடினர். 

உடனே பயந்து போன சிறுவன் செல்வ பிரகாஷ், கடைக்குள் இருந்த படி கூச்சல் போட்டு கத்தினான். திடீரென கூச்சல் சத்தம் கேட்பதால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்றார்கல்.

தப்பிச்சென்ற வட மாநில இளைஞர்கள்

உடனே அங்கிருந்து திருடர்கள் தப்பித்து ஓடும் போது அக்கம் பக்கத்தில் துரத்தி சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஒருவர் வாகனத்தை தயார் நிலையில் வைத்து தெரு முனையில் காத்துக் கொண்டு இருந்தான்.

அப்போது திருட்டில் ஈடுபட்ட இருவருரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றி தப்பித்து சென்று விட்டனர். மேலும் இது சம்பந்தமாக சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் செல்வ பிரகாஷ் என்பவர் புகார் அளித்து உள்ளார்.

அந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்கள். முதற்கட்டமாக அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த மூவரையும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். 

மேலும் பரபரப்பாக காணப்படும் பழங்காநத்தம் மேலத் தெரு பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேரும், காப்பாற்றிய நபரும் சிறுவன் கடையில் இருப்பதை நோட்டமிட்டு அந்த சிறுவனைத் தாக்கி பணத்தை எடுத்துச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்