தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  No Helmet No Petrol : கடலூர்-நோ ஹெல்மெட் நோ பெட்ரோல்!

No Helmet No Petrol : கடலூர்-நோ ஹெல்மெட் நோ பெட்ரோல்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 01, 2023 10:58 AM IST

Cuddalore 'நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்' என்ற வாசகம் எழுதிய விழிப்புணர்வு பதாகைகளையும் பெட்ரோல் பங்குகளில் வைக்க வேண்டும்.

பெட்ரோல் பல்க் - கோப்புபடம்
பெட்ரோல் பல்க் - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் போலீசார் மட்டுமின்றி, பல்வேறு துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக ஹெல்மெட் அணிவதன் கட்டாயம் குறித்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் கடலூர் தாலுகாவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என தாசில்தார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கடலூர் தாசில்தார் விஜய்ஆனந்த் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: கடலூர் தாலுகாவுக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்குகளுக்கு, பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் நிரப்ப வேண்டும். மேலும் பெட்ரோல் பங்க் வளாகத்தில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் நிரப்பப்படும் என்பதை குறிக்கும் வகையில் 'நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்' என்ற வாசகம் எழுதிய விழிப்புணர்வு பதாகைகளையும் பெட்ரோல் பங்குகளில் வைக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்