தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nellai Mayor: நெல்லை மேயர் பதவி தப்பியதா?.. ஆணையர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Nellai Mayor: நெல்லை மேயர் பதவி தப்பியதா?.. ஆணையர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Karthikeyan S HT Tamil
Jan 12, 2024 01:58 PM IST

Nellai Mayor Saravanan: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று கொண்டுவரப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் 50 இடங்களில் திமுக கூட்டணி கட்சியின் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனா். மேயராக சரவணன், துணை மேயராக கே.ஆர்.ராஜூ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனா். மேயராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் திமுக கவுன்சிலர்களுக்கும்  அவருக்கும் இடையே பல மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இது தொடர்பாக முதல்வர் உத்தரவின்பேரில் அமைச்சர் தங்கம் தென்னரசு பஞ்சாயத்து செய்தும் திமுக கவுன்சிலர்கள் பிடிவாதமாக இருந்தனா். 

தொடர்ந்து மோதல் போக்கு நீடித்த நிலையில், திமுக கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞான தேவராவிடம் மனு அளித்தனர். அதன்படி, ஜனவரி 12 ஆம் தேதியான இன்று மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மாமன்றத்தில் கொண்டுவரப்படும் என அறிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.