தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Nmms Exam 2024 Hall Ticket Released Today

Nmms Exam 2024 : 4 வருடம் கிடைக்கும் கல்விஉதவி தொகை.. என்எம்எம்எஸ் தேர்வு ஹால்டிக்கெட் இன்று வெளியீடு; தேர்வு எப்போது?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 24, 2024 07:55 AM IST

இந்த வருடத்திற்கான இந்த கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான என்எம்எம்எஸ் தேர்வு வரும் பிப்.3-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) புதன்கிழமை அதாவது இன்று (ஜன.24) பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.

Nmms Exam
Nmms Exam

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வின் மூலம் தமிழகத்தில் 6695 பேர் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். 

அந்த வகையில், இந்த வருடத்திற்கான இந்த கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான என்எம்எம்எஸ் தேர்வு வரும் பிப்.3-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) புதன்கிழமை அதாவது இன்று (ஜன.24) பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.

இந்த தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்ப் பட்டியலுடன் கூடிய வருகைத் தாள்களும் இதனுடன் வெளியிடப்படும். இவற்றை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

இதுதவிர மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் தலைமை ஆசிரியர்கள், கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையை இட்டு தேர்வு மைய விவரத்தையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும். அனுமதிச் சீட்டில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சிவப்பு நிற மையினால் திருத்தி, பள்ளி தலைமையாசிரியர் சான்றொப்பமிட வேண்டும்.

இந்த தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து உரிய முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

WhatsApp channel

டாபிக்ஸ்