தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Nia Search Operation More Than 20 Places In Tamilnadu In Relates With Coimbatore Car Blast

NIA: கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் - 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 10, 2024 07:40 AM IST

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
தமிழ்நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை உக்கடம் பகுதியில் அபிபுல் ரகுமான் என்பவர் வீட்டிலும், ஏர்வாடியில் பக்ரூதின் அலி என்பவர் வீட்டிலும் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அந்த வழக்கு என்ஐஏ அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள் அவ்வப்போது வழக்கு தொடர்பாக சோதனையும், கைது நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகவும், கோவை குண்டுவெடிப்பு தொடர்பாகவும், நிதி வசூல், மூளைசலைவை செய்தல், உபகரணங்கள் கொடுத்து உதவுதல் போன்றவற்றின் அடிப்படையிலும் தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்