Tamil News  /  Tamilnadu  /  Nia Probe Modis Bihar Visit A Link To Madurai Youth Nia Check

மோடி பீகார் பயணம்: மதுரை இளைஞருக்கு தொடர்பா? என்ஐஏ சோதனை!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 11, 2023 12:10 PM IST

இஸ்லாமிய இளைஞர்களை அச்சுறுத்துவதற்காக இது போன்ற NIA அதிகாரிகள் சோதனை நடத்தப்படுவதாக இஸ்லாமிய இளைஞர் குற்றம் சாட்டினார்.

மதுரை இளைஞர்
மதுரை இளைஞர்

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரையின் காஜிமார் தெரு பகுதியை சேர்ந்தவர் முகம்மது தாஜுதீன். இவரது வீட்டில் இன்று காலை என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சென்ற பொழுது பீகாருக்கு சென்றபோது சந்தேகத்துக்குரிய சிலரை கைது செய்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக தாஜுதீனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து அவரது செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முகம்மது தாஜுதீன், "தனக்கும் பீகாருக்கும் சம்பந்தமே இல்லாத நிலையில் பீகார் சம்பவம் தொடர்பாக NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.இது போன்று இஸ்லாமிய இளைஞர்களை அச்சுறுத்துவதற்காக NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்

முன்னதாக முகமது தாஜூத்தின் பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்ததாகவும், போலி பாஸ்போர்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இவர் தலைமறைவானதாகவும், மேலும் லக்னோ, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் வழக்கு தொடர்பாகவும் இவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இவருக்கு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனையின் போது மதுரையின் மிக முக்கிய வீதியான ஷாஜிமா தெரு மதுரை காவல்துறை மற்றும் என்ஐஏ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்